எண்ணெய் வித்துகளில் தற்சார்பை இழந்த இந்தியா!
கி.மு 3500 காலகட்டத்திலேயே ஹரப்பாவில் எள் பயிரை பயன்படுத்தியுள்ளனர் என்று 1930ஆம் ஆண்டு அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால், இதனை எதற்காக எப்படி பயன்படுத்தினர் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் எண்ணெய் உற்பத்திக்காக அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
எள்ளின் பயன்பாடு பற்றி வேதகால எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பேஷர்னா, யந்த்ரா, சக்ரா என மூன்று வடிவங்களில், பயன்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது என உணவு வரலாற்று வல்லுநர் கே டி அச்சயா தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால வணிகத்தில் பயன்பட்ட பொருளும் எண்ணெய் வித்துகள்தான். இந்தியாவில் எள் என்றால் மத்திய தரைப்பகுதி நாடுகளில், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தினர். இன்றுவரை எண்ணெய் வித்துகள் சார்ந்த தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் வலிமையான வகையில் செயல்பட்டு வருகின்றன.
ஆர்ச்சர் டேனியல்ஸ், பங்கே, கார்ஜில் லூயிஸ் டெரிஃபஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் உலகளவில் எண்ணெய் வித்துகளை அரைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் எண்ணெய் என்பது இந்துஸ்தான் லீவரின் டால்டா வனஸ்பதியிலிருந்து தொடங்குகிறது. இதனை பங்கே நிறுவனம் இப்போது சொந்தமாக்கிவிட்டது. பாமாயிலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தான் வனஸ்பதி உருவாக்கப்பட்டு வந்தது. இது விலை குறைவு என்பதால் பல்வேறு இனிப்புகளை செய்ய பயன்பட்டது.
இந்தியாவில் வேர்க்கடலை, எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் ஆட்டப்பட்டு விற்கப்பட்டு வந்தன. ஆனால் வனஸ்பதி வருகை இதை மாற்றிவிட்டது. இந்த மரபான எண்ணெய் வகைகளை விட டால்டா மிகவும் மலிவானது. எளிதாக கடைகளில் வாங்கி பயன்படுத்த முடியும். மேற்கு, தென் இந்தியாவில் சூரியகாந்தி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்பாடு அதிகம். வட இந்தியாவில் கடுகு எண்ணெய் பயன்பாடு அதிகம். கடற்புர பகுதிகளில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிகுதி.
1960ஆம் ஆண்டில் அரிசி, கோதுமை உற்பத்தி குறைந்தது. இதற்காக பசுமை புரட்சி முயற்சிகள் தொடங்கின. இந்த வகையில் பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு புதிய ஆராய்ச்சிகள் தொடங்கவில்லை. எனவே, புதிய அதிக விளைச்சல் கொண்டதாக எண்ணெய் வித்துகள் உருவாகவில்லை. இதனால் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துகளுக்கு அதிக விலை கூடியது. விலையைக் கட்டுப்படுத்த அரசு இறக்குமதியை அதிகரித்தது. அப்போது அரசு, வனஸ்பதி தயாரிப்பிற்காக பாமாயிலை இறக்குமதி செய்து வந்தது.
பாமாயில்தான், பிஸ்கெட், வறுத்த, பொரித்த உணவுகளுக்கான அடிப்படை என்பதை பலரும் அறிவார்கள். மத்திய அரசு எண்ணெய் வித்து விளைச்சலை அதிகரிக்கவும் விலையைக் குறைத்து சந்தையில் விற்கவும் முயன்றது. இதற்காக அமுல் பிராண்டை கூட்டுறவு முறையில் உருவாக்கிய வர்க்கீஸ் குரியனை அழைத்தது. அவரும் 1980இல் தாரா என்ற கூட்டுறவு முறை எண்ணெய் பிராண்டை உருவாக்கினார். வெற்றிகரமான சென்ற அரசின் ஆதரவு கொண்ட கூட்டுறவு நிறுவனம், அரசியல்வாதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் அழிக்கப்பட்டது.
தொண்ணூறுகளில் இந்திய அரசின் தற்சார்பு எண்ணெய் வித்துகள் முயற்சி, உலக வர்த்தக கழக ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. அதற்குப்பிறகு முழுக்க இறக்குமதிதான் கூடியது. பிறகு, 1998ஆம் ஆண்டு கடுகு எண்ணெய்யில் நிறைய கலப்பட பிரச்னைகள் அதிகரித்தது. கூடவே சோயா, பாமாயில் ஆரோக்கிய பிரசாரமும் கூடியது. உள்நாட்டு எண்ணெய் வித்துகள் உடலை பாதிக்கும் என ஊடகங்கள் பிரசாரம் செய்தன. மேலும் ஏற்கெனவே உள்ள எண்ணெய்வகைகளை விட இறக்குமதியாகும் எண்ணெய்களே ஆரோக்கியமானவை என மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.
இன்று எண்ணெய் விற்பனை, விலை உயர்வை கட்டுப்படுத்த எண்ணெய் வித்துகளை நம்பிக்கை வைத்து பயிரிடுவதோடு, அதற்கான விலையையும் அரசு நிர்ணயிப்பது முக்கியம்.
விக்ரம் டாக்டர் கட்டுரையைத் தழுவியது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக