ட்விட்டரை கழற்றி மாட்டப்போகும் எலன் மஸ்க்! -அல்டிமேட் திட்டங்கள் என்ன?

 ட்விட்டரை கைப்பற்றும் எலன் மஸ்க்!

கனடாவை பூர்வீகமாக கொண்ட எலன் மஸ்க், அமெரிக்காவில் நம்பிக்கை தரும் தொழிலதிபராக வளர்ந்து வருகிறார். தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு பெருந்தொற்று காலத்தில் கூட தொழிற்சாலைகளை திறந்துவிட்டார். தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வேண்டுமா வேண்டாமென்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நான் இதில் தலையிட முடியாது. என டைம் வார இதழில் துணிச்சல் பேட்டி கொடுத்தார். 

ட்விட்டர் பதிவுகள் மூலமே பங்குச்சந்தையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவர், எலன் மஸ்க். அதேநேரம் ட்விட்டரில் இவர் பதிவிடும் பல்வேறு பதிவுகள் கடுமையாக சர்ச்சையாவது உண்டு. அதற்காகவே பதிவுகளை இடுகிறாரோ என்றும் கூட பத்திரிகையாளர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும் எரிச்சலூட்டுவதில் எக்ஸ்பர்ட். பத்தாண்டுகளுக்கு அப்பால் பார்த்து அதற்கேற்ப தொழில் நிறுவனங்களை உருவாக்குவது எலனின் ஸ்பெஷல். 

நிறைய புகழ் பாடிவிட்டோம். இப்போது ட்விட்டரில் அடுத்து நடைபெறும் மாற்றங்களை பேசுவோம். 

தொடக்கத்தில் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் தான் இடம்பெறுவதாக கூறப்பட்ட எலன் மஸ்க், அடுத்த  சில நாட்களிலேயே கம்பெனியை வாங்கிவிட்டார். 

ஜனநாயகத்திற்கு சுதந்திரமான பேச்சு அவசியம் என்று கூறுபவர், அதற்கான மாற்றங்களை அல்காரிதத்தில் மாற்ற வாய்ப்புள்ளது.

ட்விட்டர் தொடங்கியது முதல் இன்றுவரை வெறுப்பு அரசியல், மத தீவிரவாதிகள் வரை பல்வேறு பாதுகாப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. ஆனால் எலன் மஸ்கின் சுதந்திரப் பேச்சு கருத்து காரணமாக, அனைவரையும் ட்விட்டரில் அனுமதிப்பது எந்தளவு நிலையை சுமூகமாக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. 

ட்விட்டரில் இப்போது முக்கியமான வருமானம் 90 சதவீத விளம்பரங்களால் கிடைக்கிறது. எலன், இந்த விளம்பரங்கள் ட்விட்டரை கட்டுப்படுத்துகிறது என நினைக்கிறார். எனவே, இவற்றை நீக்குவதும் அவரின் திட்டத்தில் இருக்கிறது. வருமானம் இழக்கப்பட்டால், ட்விட்டர் தனது செயல்பாடுகளுக்கான வருமானத்தை எப்படி திரட்டும் என்று தெரியவில்லை. 

ட்வீட்களை எளிதாக எடிட் செய்யும் பட்டன்களை உருவாக்குவது பற்றியும் எலன் மஸ்க் கூறியிருந்தார். அதனை ட்விட்டர் ஏற்கனவே சோதனையில் உள்ளதாக கூறியிருக்கிறது. இப்படி ஒரு பட்டன் உருவாக்கப்பட்டு, அதில் ஒருவர் கருத்துகளை கூறி பிறகு அதனை நீக்கினால் நிறுவனத்தின் நம்பகத்தன்மை உடையும் என நிறுவன முதலீட்டாளர் ஜே சுலிவன் கூறியுள்ளார். 

இப்போது டெலிகிராம், வாட்ஸ் அப் போன்ற கணக்குகளில் கூட பாட் கணக்குகள் உண்டு. இவற்றை எலன் நீக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் குப்பை கணக்குகள், ஆபத்தான மென்பொருட்களைக் கொண்ட கணக்குகளை நீக்கப்படவேண்டும் என நினைக்கிறார். 

இப்படி பாட்களை அழிப்பதால், எல்ஜிபிடி குழுவினர், அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவோர் பாதிக்கப்படுவார்கள். 

கட்டற்ற அல்காரிதமாக ட்விட்டர் மாற வேண்டும் என எலன் மஸ்க் ஆசைப்படுகிறார். இதன்மூலம் ட்விட்டரின் பரிணாம வளர்ச்சி எளிதாக கம்யூனிட்டி வழியாகவே நடைபெறும் என நினைக்கிறார். ஆனால் இப்படி இருந்தால், கணக்குகளை வைத்திருப்பவர்கள் பற்றிய பல்வேறு விஷயங்கள் கசிய வாய்ப்புள்ளது என்கிறார்கள் டெக் வல்லுநர்கள். 

தி டைம்ஸ் ஆப் இந்தியா  

-------------------

இன்க் மேகசின்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்