மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

 











அமிதவ் கோஷ்

எழுத்தாளர்

தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம். 

மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது. 

மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா?



சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் என்றார். மக்களின் நுகர்வு காரணமாக, இயற்கை பாதிக்கப்படும் என்பதை காந்தி அன்றே உணர்ந்து கூறியிருந்தார். எனவே அவரை ஒழிக்க நினைத்த எதிரிகள் அவர், இந்தியாவை பலவீனம் செய்கிறார் என்று பிரசாரம் செய்து வந்தனர். 

இன்று இந்தியா காந்திய கொள்கையிலிருந்து விலகி முழுக்க காலனி  கால பேரரசுகளின் கொள்கைப்படி செயல்பட்டு வருகிறது. 1989ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்க உருவாக்கிய முதலாளித்துவ கொள்கை பல்வேறு நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அதனை எதிர்ப்பது எந்த நாட்டுக்குமே கடுமையான சவால்தான். 

இப்போது சூழல் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என கூறிவருகிறார்கள் இது சாத்தியமா?

மேற்குலக நாடுகள் தான் தங்களது நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும் முதலில் அதிகாரம் இருக்கும்போது பிற நாடுகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என விதிகளை விதித்தார்கள். இப்போது நமது முறை, அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் பிறகு நாம் அதை பின்பற்றலாம். சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலுள்ள மக்களை நாம் நுகர்வைக் குறைத்துக்கொள்ள கேட்டால், நான் ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றே கேட்பார்கள்? அதுதானே உண்மை.

அமுல்யா கோபாலகிருஷ்ணன்

டைம்ஸ் ஆப் இந்தியா 


கருத்துகள்