அமெரிக்கா மென்தால் சிகரெட்டுக்கு விதித்த தடை!

 










அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு, மென்தால் சிகரெட்டுகளையும், பல்வேறு வித ஃபிளேவர்களில் வரும் சிகார்களை தடுக்க திட்டமிட்டுள்ளது. இது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இளவயதினரை பெரிதும் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. 

எஃப்டிஏ செய்துள்ள ஆய்வில் 85 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மென்தால் சிகரெட்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.  இதனை வெள்ளையர்கள் 30 சதவீதம்தான் பயன்படுத்துகிறார்கள். நாற்பது வயதிற்கு மேல் இந்த சிகரெட்டுகளை புகைக்கும் அளவு குறைகிறதா என்று உறுதியாக தெரியவில்லை. 

இந்தியாவின் நிலை

இந்தியாவில் அமெரிக்காவில் விதித்த தடை போல எதுவுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. இங்கு புகையிலை, பீடி என்பதற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. எனவே, பல்வேறு ஃபிளேவர்களில் வரும் சிகரெட்டுகள், சிகார்கள் என்பது மேல்தட்டினர் பயன்படுத்துவதாகவே உள்ளது. எனவே தடை விதித்தாலும்  எப்போதும் போலத்தான். எதுவுமே பயன் அளிக்காது.  

இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26.7 கோடி. இவர்களில் பதினைந்து அதற்கு மேல் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த தகவலை குளோபல் அடல்ட் டோபாகோ சர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.  18 சதவீதம் பேர் சிகரெட் அல்லாத வகையில் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள். 7 சதவீதம் பேர் நேரடியாக புகைப்பிடிக்கிறார்கள். 4 சதவீதம் பேர்  சிகரெட் புகைப்பது, புகையிலையை மெல்லுவது என இரண்டையும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்கிறார்கள். 

மென்தால் வாசனை புகையிலையின் கடுமையை மறைக்கிறது. மேலும் இன்னொரு வகையில் அதன் சுவையை சற்றே குறைக்கிறது. இதனால்  மென்தால் சிகரெட்டை எளிதாக இளைஞர்களும், ஏன் பெண்களும் கூட பயன்படுத்துகிறார்கள் என்கிறார் மருத்துவர் எஸ் கே அரோரா. 

ஒரு மாதத்தில் மென்தால் சிகரெட்டுகளை இரு வாரங்களுக்கு ஒருவர் புகைக்கிறார் என்றால் பெரியளவு அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் அதை அரசு தடுத்து தடை விதித்தால் அவர், சாதாரண சிகரெட்டை புகைக்க தொடங்குவார். இதனால் பாதிப்புகள் அதிகரிக்கும்  என அரோரா புதுமையான வாதத்தை முன்வைக்கிறார். 

பப்ளிக் ஹெல்த் பௌண்டேஷன் அமைப்பு, மென்தால் சிகரெட்டுகளை முதலிலேயே தடுப்பது புதிதாக அதனை புகைக்க தொடங்குபவர்களை தடுக்க உதவும். சாதாரண சிகரெட்டுகளை புகைப்பவர்கள் தான் மென்தால் சிகரெட்டுகளை புகைத்துப் பார்க்கலாம் என மாறுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது. 

தடை என்பது இந்தியாவில் பெரியளவில் வேலை செய்யாது என்ற நிஜத்தை மருத்துவர் ஜி ஏ ராத் உணர்ந்திருக்கிறார். இவர் தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் தலைவர். இ சிகரெட், குட்காவை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. ஆனால் நிலைமை என்ன இன்றும் அவை எளிதாக கிடைக்கிறதுதானே? நீங்கள் மென்தால் சிகரெட்டை தடை செய்தாலும் அவை மார்க்கெட்டில் கள்ளத்தனமாக கிடைக்கும் என எச்சரிக்கிறார். 

2009-10 காலகட்டத்தில் புகையிலையைப் பயன்படுத்துவர்களில் 15-24 வயதினரின் அளவு 18.4 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக (2016-17) குறைந்திருக்கிறது. 

கனடாவில் செய்த ஆய்வில், மென்தால் சிகரெட்டுகளுக்கு அரசு விதித்த தடை மூலம் 8 சதவீதம் அளவுக்கு புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிகரெட் புகைப்பதைக் கட்டுப்படுத்த கூடுதலாக, ஓடிடி தளங்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும் புகையிலை விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன. அரசு நினைத்தால் இதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் நினைக்கவேண்டுமே?

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

அனோனா தத்


------------------------------

ஜிஃபர்



 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்