இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி….

மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி….                                     ஷிபா மொகந்தி                    தமிழில்: அன்பரசு சண்முகம் தன் நெல் வயலில் நெற்கட்டைகளுக்கிடையே நிலையில்லாது தடுமாறும் நடபார சாரங்கிக்கு உதவ கைகொடுத்தால் சிறிய புன்னகையுடன் நம் உதவியை மறுதலிக்கிறார். தினமும் ஆறு கி.மீ தொலைவு நடந்து வந்து தன் இரண்டு ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு வேலை செய்யும் இளைஞனுக்குரிய ஆற்றல் கொண்டிருக்கும் சாரங்கியின் வயது வெறும் 81 தான் நண்பர்களே. ஓய்வு பெற்ற ஆசிரியரான சாரங்கி மற்ற தனது வயதொத்தவர்கள் போல தேநீர் பருகிக்கொண்டு செய்தித்தாள் புரட்டிக்கொண்டிருக்காமல், தனது நிலத்தில் உள்நாட்டு வகையைச் சேர்ந்த நெல்வகைகளைக் கண்டறிந்து வந்து பயிரிட்டு இயற்கை வேளாண்மை செய்துவருகிறார். கடந்த இருபதாண்டுகளாக சாரங்கி  நானூற்று அறுபது உள்நாட்டு நெற்பயிர் ரகங்களைக் தேடிக் கண்டறிந்து அவற்றை தன் நிலத்தில் பயிரிட்டும் விதை நெல்வகைகளை பாதுகாத்தும் வருகிறார். புவனேஸ்வரிலிருந்து ஐம்பத்தைந்து கி.மீ தொலைவிலுள்ள தான் வாழும் நரிசோ கிராமத்திலுள்ள தன் வீட்டிலிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணித்து உள்

மந்திரக்கோலும் தொப்பியும் நோய் தீர்க்கிறது

மந்திரக்கோலும் தொப்பியும்  நோய் தீர்க்கிறது                                சாலேட் ஜிம்மி                      தமிழில்: அன்பரசு சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்  கேரளா பெண்கள் கல்லூரியில் தன் நிகழ்ச்சியை முடித்திருந்த மந்திரக்காரர் நாத்தை மூன்று மாணவர்கள் சந்தித்து பேசும்போது அவர்களின் வெளிப்படையான உரையாடலினால் அவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையானவர்கள் என்று அவர் அறிந்துகொள்கிறார் . அவர்கள் பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நாத் தன் நிகழ்ச்சி வழியே போதைப்பொருட்களினால் ஏற்படும் கொடும் விளைவுகளை அவர்கள் முன் காட்சிப்படுத்தியிருந்தார். அது அந்த மாணவர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி அழியாது பதிந்துபோயிருந்தது. அதற்கு பின்தான் மேற்கூறிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னால் அவர்கள் போதைப்பொருட்களை தூக்கியெறிந்து தமது உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தால் நாத் அதனால் பெரிய ஆச்சர்யத்திற்கு உட்பட மாட்டார். தன் முப்பத்தைந்து ஆண்டு கால பணியில் இதுபோன்று பலரின் வாழ்க்கையினை நலமாக்கி தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கும் மற்ற மந்திரக்கா

ஒரிசாவில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை தலைவி

ஒரிசாவில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை தலைவி                       எஸ். என் அக்ராகமி                    தமிழில்: அன்பரசு சண்முகம் ‘’ நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த நவதானிய மாவு தயாரிக்கும் தொழிற்சாலை அருகே மூன்று வயதான பெண் குழந்தை ஒன்று தாய், தந்தை என யாருமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவளை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிறோம். அங்கு அவள் பாதுகாப்பாக வளருவாள் ’’ கூறும் பிரேம நளினி ஷாகு ஒடிசாவிலுள்ள பன்ச்கான் கீழுள்ள டைஜிரியா கட்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.      ஷாகு தொழிற்சாலைக்கு வந்த பிறகு சக தொழிலாள பெண்கள் அவரோடு ஒன்றிணைந்து சூழ்ந்து நின்று பணிபுரிகிறார்கள். நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, என பல்வேறு தானியங்களை தூசுகளை சலித்து எடுத்துவிட்டு, அதனை மாவாக அரைக்க கிரைண்டர் பகுதிக்கு எடுத்துச்செல்கிறார்கள். அப்போது, இருபது வயது மதிக்கும்படியான பெண் ஒருவள் கதவின் அருகில் எழுந்து நிற்க, ஷாகு அவரை சைகை காட்டி அறையின் உள்ளே அழைத்து குடும்ப விவகாரங்களை கேட்டறிகிறார். தன் கணவனின் பொறுப்பில்லாத அலட்சியத்தன்மை குறித்து அப்பெண் ஷாகுவிடம் முறையிட, அதற்கான தீர்வுகள

எளியகரங்களின் ஒன்றிணைப்பில் சாத்தியமான பசுமை வெளி

எளியகரங்களின் ஒன்றிணைப்பில் சாத்தியமான பசுமை வெளி                            ஸ்வாதி சர்மா                 தமிழில்: அன்பரசு சண்முகம் 1989 வரை ஆந்திரப்பிரதேசத்திலுள்ள அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள சென்னாகோத்தப்பள்ளி கிராமமானது விவசாயத்திற்கு பயன்படாத பூமியாக இருந்தது எதுவரையென்றால் சி.கே கங்குலி(பப்லு) மற்றும் மேரி வட்டமட்டம் ஆகிய தம்பதிகள் 1991 ஆம் ஆண்டு  இந்த நிலத்தை பார்வையிட்டு தம் நண்பர்களோடு இணைந்து இதனை பசுமை வெளியாக மாற்றும்வரைதான். இந்த தம்பதிகளோடு இணைந்து இவர்களின் நண்பரான ஜான் டி சூசா வும் உதவி செய்ததால் முப்பத்திரெண்டு ஏக்கர் நிலமான பயன்பாடு பூமியை வாங்கினார்கள். ஜப்பானிய இயற்கை விவசாயியான மாசானபு ஃபுகோக்கா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் வேதிப்பொருட்கள் இல்லாமல் இயற்கை வேளாண்மை செய்வது பற்றி பேசும் நூலானது இவர்களின் இந்த முயற்சிக்கு பெரிதும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது. நிலம் தன்னை இயல்பாக புதுப்பித்துக்கொள்ள உதவும் வகையில் மரக்கன்றுகளை நிலத்தில் ஊன்றி வைத்திருக்கிறார்கள்.      இப்பகுதியை வளமாக்க ஒத்திசைவான சிந்தனைகளைக் கொண்ட நண்பர்களோடு இணைந்து பணி

இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு மக்கள் நூலகம்

இந்தியாவில்  மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு  மக்கள் நூலகம்                         தீப்சிகா புன்ஞ்               தமிழில்: அன்பரசு சண்முகம்      புஷ்பேந்திர பாண்டியாவின் வீட்டுக்குள் நுழைந்தால் கண்ணுக்கு தெரிவது நான்கு மீட்டர் உயரமுள்ள சுவரின் சிலபகுதிகளே. அறை முழுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தானமாகப் பெற்ற புத்தகங்கள் பெரும் குவியலாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.      பாண்டியா புத்தகங்களைப் படிப்பதும், அவற்றை தன் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதுமாக இருந்த காலத்தில் மக்கள் பங்கேற்புடன் ஒரு நூலகம் தொடங்கினால் என்ன என்று ஒரு சிந்தனை தோன்றியிருக்கிறது. முதலில் மும்பையிலுள்ள புத்தகப்பிரியர்களுக்காகத் தோன்றிய மக்கள் நூலகம் இன்று ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே என பல இடங்களில் தன் புத்தகச்சிறகுகளை விரித்துள்ளது. ‘’ புத்தகங்கள் செய்தித்தாள்களைப்போல மலிவாகவும், எளிதாகவும் அனைவருக்கும் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மும்பை எவ்வளவு அதிகவசதி கொண்டதாக, அலங்காரமாக தோன்றுகிறதோ அதேயளவு அதனுள் குளிர்ந்த தனிமை உறைந்து கிடக்கிறது. நிறைய பணமோ, வளர்க

தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

      தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம் ·         அன்பரசு சண்முகம் தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும்,  தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார்.. தமிழர்களின் அடையாளம் வேட்டி என்பதைவிடவும் மொழி என்பதுதான் முக்கியமானது. அதோடு தமிழர்களின் மரபான உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்களில் தாவரங்களுக்கும், மரங்களுக்கும் இருந்த பங்கு முக்கியமானது. நகரங்கள் தோன்றியது உழவுத்தொழிலில் சிறந்த மருத நிலத்தில்தான். உழவுத்தொழிலில் வேளாண்மையும், பதினெண்பக்க தொழில்களும், பிறதொழில் செய்வோர்க்கும் போதிய உணவும், வாணிகமும் ஏற்பட்டன. பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்ட தமிழர்களுக்கு மிக நெருங்கிய உறவு கொண்ட அழிந்துவரும் பனைமரம் குறித்துப் பேசுவோம். பனை என்றால் நமக்கு மனதில் உடனே தோன்றுவது வெயில் காலத்தில் நாம் தள்ளுவண்டிக்கடைகளில் உறிஞ்சும் நுங்குதான். அதற்குமேல் அதில் அறிவது அதன் ஓலைகளில் செய்து வைத்திருக்கும் விசிறி