இடுகைகள்

ஸ்கைலேப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என