இடுகைகள்

நுண்கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுண்கடன் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கும் ஏழைப் பெண்கள்! - மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரத்தில் பெருகும் தற்கொலைகள்!

படம்
  கடன் நுண்கடன்  கடன்வலையில் மாட்டித் தவிக்கும் மகாராஷ்டிரா விவசாய கூலித் தொழிலாளர்கள் கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, குறைந்தளவிலான கடன் வழங்கும் முறைக்கு நுண்கடன் என்று பெயர். இதை தொடங்கி வைத்தவர் நோபல் பரிசு பெற்றவரான சமூக செயல்பாட்டாளர், முகமது யூனூஸ். இவர், 1983ஆம் ஆண்டு வங்கதேசத்தில் கிராம மக்களுக்கு நுண்கடன்களை வழங்கும் கிராமீன் வங்கியைத் தொடங்கி நடத்தினார். இந்த ஐடியாவை பின்பற்றி உலகமெங்கும் ஏராளமான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தோன்றின. இந்தியாவில் உருவான நுண்கடன் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், தினக்கூலி மக்களுக்கும் கடன்களை வழங்கினர். இப்படி வழங்கப்படும் தொகை முப்பது ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை கடன்   வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 30 சதவீதமாக உள்ளது. வட்டியை வாரம், பதினைந்து நாட்கள், மாதம் என பிரித்து வசூலிக்கிறார்கள். நுண்கடன் விவகாரம், வங்கதேசம் போல இந்தியாவில் வெற்றிகரமாக அமையவில்லை. மகாராஷ்டிராவில் காலநிலை மாற்றத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிலையாக இல்லை.   இந்த முறையில் பெண்களுக்கு அதிகளவில் கடன்களைக் கொடுத்து கட