இடுகைகள்

ஷோபாடே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறையில் அதிகரிக்கும் தூக்கம்; அலுவலகத்தில் கூடும் வேலை! கடிதங்கள்- கதிரவன்

படம்
  20.1.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று வெகுநாட்களுக்குப் பிறகு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டை சமைத்தேன். இதற்கு முன்னர் இதை மதிய உணவாக கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வாமை வந்தபிறகு இப்போதுதான் சாப்பிடுகிறேன். குவாக்கர் ஓட்ஸ் வாங்கி அதில் தக்காளி மிக்ஸை சேர்த்து சமைத்தேன். அதுதான் இரவு உணவு. தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து வருகிறேன். இதன் மூல நூலை குக்கூவில் வேலை செய்தபோது தமிழில் மொழிபெயர்த்தேன். அப்போது சரியாக இருப்பதாக தோன்றியது. உடனே  அதை  ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்திற்கு வெளியிட திரு. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினேன்.  அலுவலக வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எனவே, சொந்த வேலைகளையும் அறிவியல் இழ்களையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அறையில் அமர்ந்தால் தூக்கம் வருகிறது. ஆபீஸ் என்றால் வேலை செய்ய நன்றாக இருக்கிறது.  ஷோபாடே எழுதிய நூலை 200 பக்கங்கள் படித்துவிட்டேன். அப்போதும் நூலின் கருத்துக்களை அதிகம் யோசிக்கமுடியவில்லை. இதற்கு என் சோம்பலே காரணம். வினோத் அண்ணாவுக்கு எழுதிய கடிதங்களை கடித நூலில் சேர்க்க வேண்டும். ஆபீஸ் தொடங்குவதற்குள் சில நூல்கள

மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

படம்
  இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.  உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம்.  போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை