இடுகைகள்

மருத்துவம்- ரத்தசோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீண்டகால உடல்வலியை தீர்க்கும் ரகசியம்!

படம்
வலி தீர்க்கும் ரத்தம் ! ரத்தசோதனை மூலம் தீராத வலியை கண்டறியலாம் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . நோயெதிர்ப்பு செல்களின் நிறம் மாறுதலை கண்டுபிடித்து வலியைக் கண்டறிவது இம்முறையின் ஐடியா . " வலியைக் குணப்படுத்தும் முறையில் இது புதிய கண்டுபிடிப்பு ." என்கிறார் நரம்பியல் வல்லுநர் ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சிய கவுன்சில் ( அடிலெய்டு பல்கலைக்கழகம் ) தலைவரான ஹட்சின்ஸன் . ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் எனும் முறையில் நோய் எதிர்ப்பு செல்களின் நிறம் மாறுதலின் மூலம் நோயாளியின் வலி பாதிப்பு , தாங்கும் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை செய்ய முடியும் . painH5 எனும் இச்சோதனை தற்போது சோதனையிலுள்ளது . மனிதர்களுக்கு பயன்படும் என்றாலும் விலங்குகளுக்கும் பெருமளவு பயனளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் . ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற வலிநிவாரணி மாநாட்டில் இச்செய்தி வெளியிடப்பட்டது .