இடுகைகள்

சூரிய ஆற்றல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசின் தூய ஆற்றல் திட்டம்!

படம்
  தூய ஆற்றலை நோக்கி நகரும் இந்திய அரசு! இந்தியாவின் மின்சாரத் தேவை, 2020ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காகி உள்ளதாக உலக ஆற்றல் முகமை (IEA) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, இன்றுவரையும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலக்கரி சுரங்கப்பணிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையினரும் முழுவீச்சில்  இயங்கத் தொடங்கிவிட்டனர்.  இதனால் மின்னாற்றலின் தேவை அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை, 5 சதவீதமாக உயரும் என உலக ஆற்றல் முகமை மதிப்பிட்டுள்ளது.  பிற ஆற்றல் ஆதாரங்களை விட நிலக்கரி சுரங்கங்களை அமைக்க குறைந்த முதலீடு போதுமானது.  தூய ஆற்றல் ஆதாரங்களான சோலார், நீர், அணுசக்தி ஆகியவை அதிக நிர்மாண முதலீடுகளைக் கொண்டவை. எனவே, மலிவான நிலக்கரித் தொழிலில் தொழிலதிபர்களின் முதலீடுகளும் அதிகம்.   மத்திய அரசு, 2021-22 காலகட்டத்தில் 3,793 கோடி ரூபாயை (மார்ச் 14 ) தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. 2029 -30 காலகட்டத்தில் இந்தியாவின் தூய ஆற்றல்  பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என மத்திய மின்துறை ஆணையத்

குறைந்த விலையில் சோலார் பேனல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன!

படம்
  குறைந்த விலையில் சுடச்சுட சூரியன்!  சோலார் தகடுகள் மூலம் சூரிய ஆற்றலை சேமிப்பது முன்னர் இருப்பதை விட விலை குறைவானது . அடுத்த இருபது ஆண்டுகளில்  சூரிய சக்தியே முக்கியமான ஆற்றல் ஆதாரமாக இருக்கும் என உலக ஆற்றல் முகமை (IEA) கூறியுள்ளது.  உலக ஆற்றல் முகமை, தற்போது அமைக்கப்படும் சூரிய ஆற்றல் தகடுகளால் இத்துறை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 சதவீதம் வளரும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு மாற்றாக முக்கியமான ஆற்றல் ஆதாரமாக 2025இல் சூரிய ஆற்றல் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தவிலை என்பதால் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய அதிகவாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூடலாம்.  1883ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் பேனல் கண்டறியப்பட்டது. அப்போது சூரிய ஆற்றலைத் தேக்கும் திறன் 1-2 சதவீதமாக இருந்தது. பல்லாண்டு கால ஆராய்ச்சிகளால் ஆற்றலைத் தேக்கும் திறன் மெல்ல முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சோலார் செல்களின் ஆற்றல் தேக்கும் திறன் 18.2 சதவீதமாக மேம்பட்டது. புதிய சாதனையாக 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் இ