இடுகைகள்

கிளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவின் புதிய ஆயுதம்! - மக்களை விரட்ட புதிய ஆயுதம் உருவாக்கப்பட்டுவிட்டது

படம்
        sample image       அமெரிக்காவின் புதிய ஆயுதம் !   அமெரிக்க கடற்படையினர் தற்போது புதிய ஆயுதம் ஒன்றைச் சோதித்துவருகின்றனர் . கொலராடோ நகரைச் சேர்ந்த ஹர்கைண்ட் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் , மின் அதிர்ச்சி துப்பாக்கிகளை உருவாக்கி வருகிறது . இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அரசின் பாதுகாப்புத்துறை நிதியுதவி அளிக்கிறது . இக்கருவியின் பெயர் ஸ்பெக்டர் (Small arms pulsed electronization tetanisation at extended range). இதனை நூறு மீட்டருக்கும் அதிகமாக தூரத்திலிருந்தும் மனிதர்கள் மீது இயக்கி தாக்க முடியும் என்று கூறுகிறது தயாரிப்பு நிறுவனம் . இத்தாக்குதல்களுக்கு உள்ளாகுபவர் , மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டு மயங்கி விழுவர் . தற்போது வரை அமெரிக்காவில் பயன்படுத்தி வரும் டாஸர் என்ற கருவி வயர் மூலம் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . இது எட்டு மீட்டர் தூரத்திற்குள்தான் செயல்படும் . இதனால் ஏற்படும் அதிர்ச்சி , பாதிப்பு பற்றி சாதக , பாதக கருத்துகள் நிறைய இருக்கின்றன . ஆனால் அடிப்படையில் இதில் போலீசார் மூலம் தாக்கப்படுபவர் மின்னதிர்ச்சி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துவிடுவார்