இடுகைகள்

மெனிங்கிடிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூக்க குறைபாடுகளின் வகை, விமானப் பயண ஜெட்லாக் - மிஸ்டர் ரோனி

படம்
          அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி தூக்க குறைபாடு நோய்கள் வகைகள் உண்டா? அனைவரும் அறிந்த தூக்க குறைபாடு என்பது இன்சோம்னியா. இரவில் தூக்கமின்மை, தூங்காமல் விழித்திருப்பது, படுத்தாலும் ஓய்வே இன்றி எழுவது ஆகியவை இன்சோம்னியாவின் அறிகுறிகள். இக்குறைபாட்டிற்கு காரணமாக மன அழுத்தம், சோர்வு, மது அருந்துவது, காபி, தேநீர் அருந்துவதை காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஹைப்பர் சோம்னியா, பகல் இரவு என பாராமல் எப்போதும் தூங்கி வழிவது. இந்த வகையில் இக்குறைபாடு, இன்சோம்னியாவிற்கு அப்படியே எதிரானது. நார்கோலெப்சி, எப்போது ஒருவர் தூங்குவார் என்றே கூறமுடியாது. சில நிமிடங்களில் தூக்கத்தில் ஒருவர் ஆழ்ந்துவிடுவார். தூக்க செயலிழப்பு என மருத்துவர்கள் நார்கோலெப்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். உணர்ச்சிகரமான நிகழ்வுகள், திடீர் தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. கண்கள் விழித்திருக்கும், மூச்சுவிடுவார்கள், மூளை செயல்படும். ஆனால் உடல் செயலிழந்த நிலையில் இருக்கும். ஸ்லீப் அப்னியா, குறைபாட்டில் ஒருவர் தூங்கும்போது திடீரென மூச்சு நின்றுபோய்விடும்.இதனால், அவர் தூக்கத்தில் இருந்து எழ நேரிடும். பலருக்கு...