இடுகைகள்

உளவியல் ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதற்றம் போக்கும் மாத்திரை! - பிளாசிபோ செய்யும் உளவியல் தந்திரம்!

படம்
      cc பதற்றம் போக்கும் மாத்திரை ! மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் மனநல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பிளாசிபோ எனும் போலி மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . இந்த மாத்திரைகளில் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது . இதில் முக்கியமான அம்சம் , நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் போலியானவை என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறமாட்டார்கள் என்பதுதான் . அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பிளாசிபோ மாத்திரைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் . இது புதிய செய்தி அல்ல ஆனால் நீங்கள் சாப்பிடுவது பிளாசிபோ மாத்திரைகள் என்று சொல்லிக்கொடுத்தும் கூட நோயாளிகளுக்கு மன அழுத்தம் , பதற்றம் சார்ந்த சிக்கல்கள் குறைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது . உளவியல் ஆராய்ச்சியாளர் டார்வின் குவாரா தலைமையிலான குழுவினர் , இப்பரிசோதனைகளை செய்தனர் . மனநிலையை பாதிக்கும் படங்களை முதலில் 62 பேருக்கும் , பின்னர் 198 பேருக்கும் காட்டி பிளாசிபோ மாத்திரைகளை சாப்பிடக் கூறினர் . பின்ன

சக்தி வாய்ந்த பழக்கங்கள் வாழ்க்கையை கூட மாற்றும்! - இதோ சில எடுத்துக்காட்டுகள்

படம்
சக்தி வாய்ந்த பழக்கங்கள் நாம் அறிந்தோ அறியாமலோ சில விஷயங்களை இயல்பாக செய்வோம். குறிப்பாக சூரிய ஆற்றல் கொண்ட காலை நேரங்களை செலவழிப்பது, பயம் ஏற்பட்டால் எதிர்ப்பது அல்லது ஓடுவது, தேவைகளுக்காக போராடுவது என்பனவற்றை சொல்லலாம். அவற்றில் சில....   அழும் குழந்தை வீல் என்ற குழந்தையின் அலறலை யாருமே பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. கோவில், திருமணம், அலுவலக சந்திப்பு, உணவு விடுதி என எங்குமே குழந்தைகளின் வீறிடல் பலரின் கவனத்தை ஈர்க்கும். பின்னே சீர்காழி கோவிந்தராஜன் போல ஹைபிட்சில் முழங்கினால்... ஆனால் குழந்தைக்கு அது அத்தியாவசியம். குழந்தைகள் உலகில் பிறக்கும்போது, அவர்களுக்கு உடல் முழு வளர்ச்சி பெற்றிருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அளவு வேறு தம்மாத்துண்டு. வலி, பசி ஏற்பட்டால் சொல்ல வார்த்தைகள், மொழி எல்லாமே அழுகைதான். ஏதோ சரியில்லை குழந்தை அழுதுதான் பெற்றோருக்கு உணர்த்துகிறது. குழந்தைகள் தம்மைதாமே காப்பாற்றிக்கொள்ள அழுகை சக்திவாய்ந்த ஆயுதமாக பயன்படுகிறது. இனிப்பு எனக்கு பிடிக்கும் உடல் இப்படித்தான் சொல்லி இனிப்பு பலகாரங்களை தொண்டைக்குழி வரை நிரப்புகிறது. உடலுக்கு சரியி

பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? - சில முக்கியமான பழக்கங்கள் இவை!

படம்
நிறைய பழக்கவழக்கங்களை உடனே மாற்றிக்கொள்ள முடியாதுதான். ஆனால் மாற்றிக்கொள்வது அப்பழக்கம் தீவிரமான குறைபாடுகளாக பின்னாளில் மாறுவதைத் தடுக்கலாம். அதில் சிலவற்றைப் பார்க்கலாம். நகம் கடித்தல் உலகிலுள்ள 44 சதவீத இளம் வயதினர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 19 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் பதற்றக்குறைபாட்டை நினைவுறுத்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவயதில் வாயில் விரலைப் போட்டுக்கொள்ளும் அல்லவா? அந்த பழக்கம் அப்படியே தொடர்வதன் காரணமாக நகங்களை கடித்து துப்புவது மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் உளவியலாளர் டோனன்ஃபீல்டு. விரலைச்சூப்புவது இது தாயிடமிருந்து பால்குடியை மறக்க முடியாமல் தவிக்கும் வளர்ந்த குழந்தைகளின் மனிநிலையை வெளிப்படுத்துகிறது. நான்கு வயது வரை சிலர் கைசூப்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அளவுக்கதிக சாப்பாடு விரக்தி, மகிழ்ச்சி, சோகம் என எந்த உணர்வுகளின் வெளிப்பாட்டையும் சிலர் அண்டா சோற்றை உண்டே வெளிக்காட்டுவார்கள். இது தனிப்பட்டவர்களின் பாணி. இந்த உணர்வு ஏற்படுவதற்கு முக்கியக்காரணம், சாப்பிட்டால்தான் அவர்களது மூளையில் மகிழ்ச்சிகர நிறைவ

மனப்பதற்றத்தை உண்டாக்கும் மூளையிலுள்ள புரதம்! - மனப்பதற்றத்தை குறைக்கும் வாய்ப்பு

படம்
நம் அனைவருக்கும் இப்போது பெரிய பிரச்னையாகவும், எப்படி சமாளிப்பது என தலையை பிய்த்துக்கொள்வதுமாக இருப்பது மனப்பதற்றம்தான். எதன் காரணமாக மனப்பதற்றம் ஏற்படுகிறது, அதனை எப்படி தீர்ப்பது என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தியானம், யோகம் என்று பலர் கூறினாலும் பலருக்கும் மனப்பதற்ற குறைபாடு கட்டுப்படுவதாக இல்லை. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினர் இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். நியூரோட்ராபின்3 என்ற புரதம்தான் நியூரான்களை ஊக்கப்படுத்தி அமிக்தலா பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்துள்ளனர். இதற்கான சோதனையை மக்காவ் வகை குரங்குகளிடம் செய்து பார்த்து திருப்தியாகி உள்ளனர். ஆண்ட்ரூ ஃபாக்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், நாங்கள் மனிதரில்லா விலங்கிடம் இதனை சோதித்து வெற்றி கண்டுள்ளோம் என்கிறார். இங்கிலாந்தில் முப்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் மனப்பதற்ற குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் பத்தில் ஒருவருக்கு இக்குறைபாடு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரைவில் மனப்பதற்றக் குறைபாட்டை போக்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படலாம் என நம்பப்படுகிறது. நன்றி: பிபி

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

மனநோயாளிகளை சந்தித்து ஆய்வுகளைச் செய்தார் ஹரே!

படம்
ராபர்ட் ஹரேவின் உளவியல் பயணம்! 1980 களில் ஹரே தனக்குப் பிடித்தாற்போல ஆய்வகத்தை உருவாக்கினார். பதினெட்டு பட்டதாரி மாணவர்கள் அப்போது அவரிடம் இருந்தனர். அப்போது அரசு பல்வேறு சோதனைகளை செய்துபார்க்க நிதியுதவிகளையும் அள்ளிக் கொடுத்தது. ஆராய்ச்சி என்பது அப்போது அவ்வளவு சந்தோஷத்தை அள்ளிக்கொடுத்தது என்றுகூறும்போது, அவரது முகத்தில் நினைவுகளின் தழும்புகள் நிழலாடின. எலக்ட்ரோஎன்செப்லோகிராம் சோதனைகளையும் ஒலி உள்ளே வராத அறைகளை அமைத்து செய்யத் தொடங்கினார். மனநிலை பிறழ்ந்தவர்கள் இழக்கும் உணர்ச்சியின்மை பற்றி ஆய்வுகளில் பரபரத்தார் ஹரே. இது கிளெக்லி குறிப்பிட்ட செமான்டிக் அப்ஹாசியா என்ற தியரியைத் தழுவியது. பொதுவாக உணர்ச்சியற்ற மனிதர்களுக்கு மொழியும் உணர்ச்சியும் வேறு வேறு என்ற எண்ணம் உண்டு. இஇஜி மூலம் மூளையின் செயல்பாடுகளை பின்தொடர்ந்தார் ஹரே. உணர்ச்சிகளைக் கொண்ட வார்த்தைகள், உணர்ச்சியற்ற நியூட்ரல் வார்த்தைகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தார் ஹரே.  உணர்ச்சி, வார்த்தைகள் இந்த இரண்டையும் மக்கள் எளிதாகப் புரிந்துகொண்டுவிடுகின்றனர். இதில் துல்லியம் தவறுவதில்லை. மனநிலை பிறழ்ந்தவர்கள் உணர்ச்சிக