சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!
ஜிபி |
சமூக தனிமைப்படுத்துதல்
பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது
பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே
மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி
இன்று உலக நாடுகள் பலவற்றிலும்
முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை
வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே
நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள்,
நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான்.
பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு
வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.
வீடுகளில் இருந்துகொண்டே
டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள
மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி, சினிமா,
ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும்
விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில்
இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உணர்வின் ஆழத்தில் அவர்கள் பிறருடன் பேசுவதற்கான
தவிப்புதான் உள்ளதா என சோதித்தோம்.
இதில் சோதிக்கப்படுபவர்களில்
சிலர் பிறருடன் பேச அனுமதிக்கப்பட்டனர். சிலரை உறுதியாக யாருடனும் பேச அனுமதிக்கவில்லை.
இவர்கள் அனைவரின் மூளையையும் சோதித்தபோது, மூளையில் சுரக்கும் டோபமைனின் அளவு மாறுபட்டிருந்தது.
நண்பர்களுடன் உறவினர்களுடன் பேசியவர்களை விட அப்படி பேசாதவர்களுக்கு மூளையில் பசி ஏற்படும்
உணர்வு அதிகமாக தூண்டப்பட்டிருந்தது. இதன்மூலம் மனிதர்கள் பிறருடன் கலந்துரையாடல் செய்ய
ஆழமாக விரும்புவது தெரிய வந்துள்ளது. நாங்கள் இச்சோதனையை எலிகள் வைத்தும் சோதித்துப்
பார்த்தோம். இந்த சோதனை வெற்றி பெற்றால், ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகளின் சமூக
செயல்பாடுகளை ஊக்கம் கொள்ளச்செய்ய முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக