உதவிகளைச் செய்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை நான் வெறுக்கிறேன்! - கௌதம் காம்பீர்





Gautam Gambhir offers 1,000 PPE kits to AAP government- The New ...
nie



கௌதம் காம்பீர்

பாஜக சார்பில் கிழக்கு டில்லியில் போட்டியிட்டு வென்றவர். கொரோனா கால பல்வேறு உதவிகளை தனது காம்பீர் பவுண்டேஷன் அமைப்பு மூலம் வழங்கி வருகிறார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி பேசினாலே தீவிரமாக ஆவேசப்படுகிறார்.

ஊரடங்கு காலத்தை எப்படி சமாளித்தீர்கள்?

அனைத்து மக்களும் இந்த ஊரடங்கு நேர்மறையாகவே பார்க்கிறார்கள். நான் இந்த ஊரடங்கில் இதுவரை செய்யாத விஷயங்கைளைச் செய்து வருகிறேன். முதலில் கிரிக்கெட் அதுசார்ந்த விஷயங்களைச் செய்துகொண்டிருந்தேன். இப்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வீட்டிலுள்ள என் குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுகிறேன். சாப்பிடுகிறேன். நிம்மதியாக தூங்குகிறேன். நான் கவனம் செலுத்தாத பல்வேறு விஷயங்களைச் செய்வதற்கு கிடைத்த வாய்ப்பாகவே இந்த காலத்தைப் பார்க்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் தீவிரமாக இருப்பீர்கள் போல?

நான் என் மகள்களோடு செலவிட்ட அற்புதமான நேர அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தேன். மற்றபடி தனிப்பட்ட அனைத்து விஷயங்களையும் பிறருடன் பகிர நினைக்கவில்லை. ஊரடங்கில் என்ன செய்யமுடியுமோ அந்த விஷயங்களில் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன். அவ்வளவுதான்.

உங்கள் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி அறியவே முடியவில்லையே?

எங்களது அமைப்பின் குழுச்செயல்பாடு அப்படிப்பட்டது. நாங்கள் பல்வேறு உணவு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வழங்கினோம். இதைப்பற்றி ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. உதவிகளைச் செய்வது நமது மனதிருப்திக்காகத்தான். நிறையப்பேர் உதவிகளைச்செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறார்கள். எனக்கு அது வெறுப்பைத் தருகிறது. நாங்கள் தினசரி பத்தாயிரம் உணவுப்பொட்டலங்களையும், அவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். வழங்கும் பையில் எங்கள் அமைப்பின் பெயர் மட்டும் இருக்கும். நோயாளிகளுக்கு தேவையான மருத்துவக் கருவிகளை நாங்கள் 4500 பேருக்கு நான்கு மருத்துவமனைகளின் உதவியுடன் வழங்கியுள்ளோம்.

ஊரடங்கிலும் சிலர் மதத்தின் பெயரில் வெறுப்பு வாதம் பேசுகிறார்களே?

இந்த நேரத்தில் வெறுப்பும், பிரிவினை வாதமும் அவசியமில்லாத ஒன்று. இப்போது முழு இந்தியாவும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்  தங்கள் வீடுகளுக்கு கூட செல்லமுடியாமல் மருத்துவமனையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். சில குழுக்கள் அவர்களை கல்வீசி தாக்குவது எனது இதயத்தை நொறுக்கியது. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான் நடவடிக்கையை நாம் எடுக்கவேண்டும்.

முக கவசம் கூட அணியாமல் தெருக்களில் மக்கள் சுற்றுகிறார்களே?

அவர்களை காவல்துறை உதவியுடன் பிடித்து முகாமில் தங்க வைக்கவேண்டும். அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து கண்காணித்து வரவேண்டும். காசிபூர், யமுனா விளையாட்டு மையம் ஆகிய இரு இடங்களில் முகாம்கள் உள்ளன. அங்கு அவர்களை தங்க வைக்கலாம்.

டில்லியில் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுற்றித் திரிகிறார்களே?

டில்லி அரசு, ஒரு கோடிப்பேருக்கு மேல் உணவளித்து காப்பதாக சொல்கிறார்கள். அது சரியான தகவல் இல்லை. இவர்கள் உண்மையைச் சொல்லாமல் தவிர்க்க என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. இவர்கள் செய்யவிட்டாலும், எதிர்காலத்தில் நாங்கள் அதனைச் செய்வோம். இத்தொழிலாளர்களின் நிலையைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

ஆங்கிலத்தில்: மோனிகா ராவல் குக்ரேஜா







கருத்துகள்