ஆரோக்கியமான உணவுமுறை என்று ஒன்று கிடையாது! - வித்யுத் ஜாம்வால்




Vidyut Jamwal Wallpapers | vidyut-jamwal-8 - Bollywood Hungama

ஊரடங்கு காலத்தை எப்படி செலவிட்டீர்கள்?

தென்னிந்தியாவிலுள்ள கிராமம் ஒன்றில் நான் தங்கியுள்ளேன். ஆனால் எந்த கிராமம் என்று உங்களுக்கு சொல்ல மாட்டேன்.

இணையத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறீர்கள். இதற்கு உங்களைத் தூண்டியது எது?

நிறைய பேர் இணையம் வழியாக எனது உடற்பயிற்சி முறைகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னர் இதுப்பற்றி கூறியது இல்லை. காரணம், அன்று நான் தீவிரமாக பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அதனால் அவர்களுக்கு சொல்லித்தரமுடியவில்லை. இன்று நேரம் கிடைத்துள்ளது. நான் இன்று பெற்றுள்ள உடல் அமைப்பு என்பது கடினமான பயிற்சி, உணவுமுறையால் உருவானது. இதில் மாயமந்திரம் ஏதுமில்லை. நீங்கள் உங்கள் உடல் அமைப்பைப் புரிந்துகொண்டு பயிற்சி செய்யவேண்டும்  அவ்வளவுதான். உடற்பயிற்சி என்பது உடலை கட்டான அமைப்பிற்கு மாற்றுவது மட்டுமல்ல. உங்கள் மனதில் உள்ள வலிமையை அதிகரிப்பது இதில் முக்கியமாகும்.

இதில் ஆரோக்கியமான உணவுமுறையும் முக்கியமானதா?

அப்படி ஒன்று கிடையவே கிடையாது. நான் எனக்கு கிடைத்த விஷயங்கள் அனைத்தையும் சாப்பிடுகிறேன். டயட் என்பதை வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க முடியாது. அது மிகவும் கடினம். நான் இதுவரை எந்த டயட்டையும் கடைபிடித்தது இல்லை. எனக்கு தற்காப்பு கலையைச் சொல்லிக்கொடுத்த குரு, சாப்பிடும் உணவை 32-68 முறை நன்றாக மென்று சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார். இதன் மூலமே உங்கள் உடல் உணவை நன்றாக செரிக்க முடியும். பொதுவாக டயட்டை கடைபிடித்தால் உடனே மக்கள் உங்களைப் பார்த்து எடை குறைந்து தெரிகிறீர்கள் என்பார்கள். இதன் பொருள் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் புரிந்துகொண்டு வியப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. எப்போதும் சாப்பிடுவதற்கான வேகமும், பசியும் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

இதுபோன்ற நெருக்கடியான நிலைமைகளில் உங்களை மகிழ்ச்சியாக இருக்க வைப்பது எது?

நான் சிறுவயதிலிருது களரிபயட்டை கற்றுவருகிறேன். பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் உடலில் ஏற்படும் முதுகெலும்பு பாதிப்பு, முதுகுவலி போன்ற பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்தும் பயிற்சியாளராக இருந்தேன். ஆனால் நான் ஃபோர்ஸ் படத்தில் நடித்தபிறகு அனைத்தும் மாறிவிட்டது. மக்கள் என்னை வெறுமனே சந்திக்க மட்டும் வருகிறார்கள். இதனால் மக்களை குணப்படுத்தும் பணியை நான் கைவிட்டுவிட்டேன். நான் அண்மையில் 72 வயதான பெண்ணுக்கு சுவாசிப்பது பற்றிய வகுப்பை எடுத்தேன். அதில் அவர் குணம் பெற்றார். நம் உடல் அருமையான தன்மையான கொண்டது. தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் இயல்பு கொண்டது. இதனை மக்கள் புரிந்துகொண்டது மகிழ்ச்சி.

ஊரடங்கு காலத்திற்கு முன்பான நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் ஏதேனும் வேறுபாட்டை உணர்கிறீர்களா?

இல்லை. நான் சினிமா படப்பிடிப்புகளுக்கு செல்ல முடியவில்லை. என்பதுதான் வித்தியாசம். படப்பிடிப்பில் நான் காரில் அமர்ந்திருப்பேன். தற்போது சூரியனின் ஒளி, சந்திரனின் ஒளியில் இருக்கிறேன். நான் இந்த சூழ்நிலையை அனுபவிக்கிறேன்.

நன்றி






கருத்துகள்