கடின உழைப்பு உங்களுக்கு பதற்றத்தையே ஏற்படுத்தும்! - எழுத்தாளர் ஹெட்லி




First May, May Day, May, Hardworking, Spring, People




கடுமையான உழைப்பு நமக்கு சந்தோஷத்தையும் செல்வத்தையும் வழங்காது.

எழுத்தாளர் செலஸ்ட் ஹெட்லி

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ஹெட்லி, சுயமாக உருவாகிய மனிதன், பல்வேறு பணிகளை செய்பவர் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிரிக்கிறார். தொழில்துறையினர் கடுமையான உழைப்பு பற்றி உருவாக்கியிருக்கும் அனைத்து கருத்துகளையும் எளிமையாக புறக்கணிக்கிறார். இதுபற்றி நாம் பொதுமுடக்க காலத்தில் யோசிப்பது நல்லது என்கிறார்.

இவர் அண்மையில் டூ ந த்திங் ஹவ் டு பிரேக் அவே ஃபிரம் ஓவர் வொர்க்கிங், ஓவர்டூயிங் அண்டஃ அண்டர்லிவ்விங் என்ற நூலை எழுதியுள்ளார். உழைப்பு பற்றி என்ன கருத்துகளை சொல்ல வருகிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம்.

நம் வாழ்க்கையை மாற்றியுள்ள வைரஸ் கிருமிகள் நம்மிடம் சொல்லுவது என்ன?

வைரஸ் நம்மிடம் பேசவில்லை. நாம்தான் நம்மிடம் பேசியுள்ளோம். அதற்கான சூழ்நிலையை வைரஸ் உருவாக்கி தந்துள்ளது. ஏன் நம்மால் வீட்டில் அமர்ந்து பணி செய்ய முடியவில்லை. கடுமையாக வெளியில் செல்ல தவிக்கிறோம். வீட்டில் இருந்தால் கூட நம்மால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. வீட்டைக் கூட காப்பகமாகவும், நம்மை அகதியாகவும் நினைத்துக்கொள்வது ஏன் என்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பதிலைத் தேட முடியும்.

தொழில்நுட்பம்தான் நம்மை வேலையில் பதற்றத்திற்குள்ளாக்கி இருக்கிறதா?

தொழில்நுட்பம் என்பது கருவிதான். அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம்.

செயலின்மை என்பது சோம்பேறித்தனத்திலிருந்து எப்படி மாறுபடுகிறது?

சோம்பேறித்தனம் என்பது செயல்பட முடிந்தும் செயல்படாமல் இருப்பது. செயலின்மை என்பதை உண்மையிலேயே அனைத்து செயல்பாடுகளும் நின்றுபோவது. இயல்பாகவே நமது உடலும் மனதும் குறிப்பிட்ட நேரம் கவனமாக பணிபுரிவதும் பின்னர் ஓய்வு எடுப்பதும் என்றே செயல்படக்கூடக்கூடியது. இப்படி செயல்படுவதுதான் ஆரோக்கியமானது. இந்த மாதிரிதான் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணமாக இருந்துள்ளது.

பெர்னார்ட் ரஸ்ஸ்ல் சொல்லிய செயலின்மையை தடுக்கும் வழி என்ற கருத்துகளை இனிமேல் நாம் பின்பற்ற வேண்டியதில்லையா?

அவர் சொல்லிய கருத்துகளை கடைப்பிடித்ததால் ஏறத்தாழ 90 ஆண்டுகளாக நம் பழக்கவழக்கங்கள், திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் அவரது கருத்துகளை நாம் கடைபிடிக்கவேண்டியதில்லை. முன்னர் நாம் ஆண்டில் அரை ஆண்டுக்கும் குறைவாகவே பணியாற்றினோம். ஆனால் இப்போது தினசரி அதிக நேரங்கள் பணியாற்றி வருகிறோம். இது அவசியமில்லை.

நீங்கள் உங்கள் நூலை திறனுக்கான எடுத்துக்காட்டு என்று எப்படி சொல்லுகிறீர்கள்?

அமெரிக்காவில் வாரத்திற்கு 50 மணிநேரங்களுக்கு மேல் உழைப்பவர்களுக்கு ஆறு சதவீத உயர்வுதான் கிடைத்துள்ளது. இப்படி உழைப்பது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. அதிக நேரம் உழைப்பது, யோசிப்பது என்பது நம் மூளையைப் பாழ்படுத்துகிறது. அதிக உழைப்பு காரணமாக நமக்கு செல்வம், மகிழ்ச்சி கிடைப்பதில்லை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. கடின உழைப்பு என்ற சிந்தனை நம் மூளையை செயல்பாடுகளை நச்சுப்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில்: சர்மிளா கணேசன்


கருத்துகள்