கோவிட் - 19 தொற்று அதிகரிப்பது நல்ல அறிகுறிதான்! - மரு. பிரதீப் கவுர், மரு. பி. மாணிக்கம்




Coronavirus, Virus, Mask, Corona, Pandemic, Outbreak
pixabay




மொழிபெயர்ப்பு நேர்காணல்

தமிழகத்தில் திடீரென கோவிட் -19 தொற்று திடீரென அதிகரித்துள்ளது. அதுவும் மிகச்சில நாட்களில் இந்த எண்ணிக்கை அச்சுறுத்தலாக உள்ளதே?

ஐசிஎம்ஆர் இன் அறிவுறுத்தல்படி  சோதனைகளை நாங்கள் அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தினசரி 10 ஆயிரம் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்ஃப்ளூயன்சா போன்ற தொற்று அறிகுறிகளை கொண்டவர்கள் முதலில் சோதிக்கவில்லை. இப்போது நாங்கள் அவர்களையும் சோதித்து வருகிறோம். இதன் காரணமாக நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதி, அவர்களின் தொடர்பு கொண்ட நபர்கள் என்று நாங்கள் சோதித்து வருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். விரைவில் இந்த எண்ணிக்கை குறையும்.

தமிழகம் ஏறத்தாழ இரண்டு மாதங்களாக ஊரடங்கில் இருக்கிறது. நோய்த்தொற்று எப்போது குறையும்? நிலைமை எப்போது சீராகும்?

நோய்த்தொற்று குறைவது என்பது நோயாளிகளை சரியாக சோதனை செய்வது, சிகிச்சை, மருத்துவ வசதிகள், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைச் சேர்ந்தது. முழுக்க தீர்வைப் பெறுவது என்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இப்போது ஊரடங்கை தளர்த்துவது என்பது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தது. நோயின் தொற்றைப் பொறுத்து பல்வேறு ஊரடங்கு, முழு ஊரடங்கு என அவர்கள் விதிக்க வாய்ப்பிருக்கிறது.

நோய்த்தொற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விலகலைக் கடைபிடிக்கவேண்டும். சந்தை போன்ற இடங்களில் மக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். இல்லையெனில் அங்கிருந்து அதிகளவில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.

வைரஸ் உடலில் தங்கியிருக்கும் காலம், மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஆகியவற்றை எப்படி செய்வது?

நாங்கள் வைரஸ் பற்றி இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்பதால் இந்த வைரஸ் பற்றி முழுமையாக இன்னும் அறியவில்லை.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

ஆங்கிலத்தில்: புஷ்பா நாராயணன்


கருத்துகள்