நான் சென்னைவாசி என்பதிலும் தமிழன் என்பதிலும் பெருமை கொள்கிறேன்! - டி.எஸ். திருமூர்த்தி



T S Tirumurti appointed as Ambassador/Permanent Representative of ...
affairscloud




ஐ.நா அமைப்பில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக டி.எஸ். திருமூர்த்தி தேர்வாகியுள்ளார். இவர் இந்த அமைப்பில் 22வது பிரதிநிதியாக பொறுப்பேற்று செயல்படவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.


ஆங்கிலத்தில்: ஏ.சுப்பிரமணி

வாழ்த்துகள் சார். ஐ.நா அமைப்பின் 22வது பிரதிநிதியாக இந்தியாவில் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அதிலும் நீங்கள் உங்களது நூலில் சென்னைவாசி என்ற வார்த்தையை பெருமையாக பயன்படுத்தியுள்ளீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி. நான் சென்னைக்காரன் என்பதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதிலும் பெருமை உண்டு. நான் சிறுவயதில் இங்குதான் தொடக்க கல்வியும் உயர்கல்வியும் கற்றேன். அதேசமயம் இந்தியனாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புகளையும் நான் உணர்ந்துள்ளேன். என்மேல் பிரதமர் வைத்து நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

நான் கோவையில் பிறந்தேன். ஆனால் எனது தொடக்க கல்வி மயிலாப்பூரிலுள்ள வித்யாமந்திரிலும், கல்லூரி விவேகானந்தா கல்லூரியிலும் தொடர்ந்தது. எனக்கு கல்வி கற்றுக்கொடுத்த இந்த கல்வி நிறுவனங்களை நான் என்றுமே மறக்க முடியாது. என்னுடைய பள்ளி கல்லூரி நண்பர்களோடு நான் இன்னும் தொடர்பில் இருக்கிறேன. என்னுடை ஆசிரியர்களையும் குருக்களையும் என்னால் மறக்கவே முடியாது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுடைய  தாத்தா நினைவாக திருமூர்த்தி நகர் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. உங்களுடைய குடும்பம் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள்தானா?

எங்கள் தாத்தா சென்னையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் எங்கள் குடும்பமும் சென்னையைச் சேர்ந்தவர்களாகவே மாறிவிட்டனர். என்னுடைய தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அம்மா, கோபி செட்டிபாளையத்திலுள்ள கல்பாக்கம் எனும் ஊரைச் சேர்ந்தவர். என்னுடைய மருமகன் விக்னேஷ் சென்னையைச் சேர்ந்தவர். என்னுடைய மனைவி கௌரி, டென்னிஸ் வீரர் ராமனாதன் கிருஷ்ணனின் மகள் ஆவார்.

உங்கள் குடும்பத்திற்கு பிடித்த விளையாட்டு டென்னிஸ்தானா?

என்னுடைய மனைவி கௌரி, தேசிய டென்னிஸ் சாம்பியன். ஜூனியர் அளவில் பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார். என்னுடைய மகள் பவானி, மகன் விஸ்வஜித் இருவரும் தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேடுத்திருக்கிறார்கள். என்னுடைய மச்சினன் கூட டென்னிஸ் வீரர்தான். என்னைத்தவிர என்னுடைய குடும்பத்தில் அனைவருமே விளையாட்டு வீரர்கள்தான்.

பொதுவாக எல்லாருமே ஐஏஎஸ் தான் வேண்டும் என தேர்வெழுதுவார்கள். நீங்கள் ஏன் ஐஎப்எஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?

என்னுடைய மாமா சி.எஸ். ராமச்சந்திரன் ஐசிஎஸ் படித்தவர். பின்னர் செயலாளராக இருந்து ஓய்வுபெற்றார். என்னுடைய உறவுமுறையில் சகோதரர்கள் பலரும் குடிமைப்பணி தேர்வு எழுதி பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இவர்கள்தான் எனக்கு ரோல்மாடல்கள்.

நீங்கள் எங்கெங்கு பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நான் என்னுடய பணியை கெய்ரோ நாட்டில் தொடங்கினேன். பின்னர் ஐ.நாவுடன் இணைந்து காசா, ஜெனீவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளேன். மலேசியாவில் கடைசியாக ஹை கமிஷனராக பணிபுரிந்துவந்தேன். அனைத்து பணிகளிலும் பல்வேறு சவால்கள் இருந்தன. அவற்றை சமாளித்துத்தான் நான் மேலே வந்தேன். மலேசியாவில் நான் ஆண்டுகளாக பணிபுரிந்தது நல்ல அனுபவம். எனக்கு அது இரண்டாவது வீடு போலவே தோன்றியது. ஐ.நா சார்பில் டில்லியிலும் கூட வேலை செய்துள்ளேன். மலேசியாவிலும் இங்கும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.

இந்திய தலைநகரான டில்லியில் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய பணியில் பார்த்த வளர்ச்சி, மேம்பாடு விஷயங்களைச் சொல்லுங்கள்.


ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இடையில் பல்வேறு வணிகம் சார்ந்த முயற்சிகள், செயல்பாடுகளில் நான் பங்களித்துள்ளேன். அண்மையில் சென்னையில் நடந்த வணிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சிகளில் நான் பங்களித்துள்ளேன். கோவிட் -19 தொற்று காரணமாக 85 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை செய்தேன். சுகாதார பணியாளர்களுக்கான வீடியோ வடிவிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது.

நீங்கள் இத்தனை பணிகளைச் செய்துகொண்டும் எப்படி மூன்று நூல்களை எழுதினீர்கள்?


நான் உற்பத்திதிறன் அதிகம் கொண்டவன். வெளியுறவுத்துறை அலுவலகத்திலிருந்து நான் இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வருவேன். அப்போது குடும்பமே முழுமையான உறக்கத்தில் இருப்பார்கள். நான் பதினொரு மணி தொடங்கி நள்ளிரவு வரை வேகமாக எழுதுவேன். அலுவலக விவகாரங்களை மூளையில் இருந்து கழற்ற வைத்துவிட்டு என்னால் நன்றாக உறங்க முடிகிறது என்றால் அதற்கு எழுத்தும் ஒரு முக்கியக் காரணம்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா






கருத்துகள்