அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்குவது என்றே புரியவில்லை - மனிஷ் சிசோடியா, டில்லி துணைமுதல்வர்


ಆರಂಭಿಕ ಸುತ್ತುಗಳ ಹಿನ್ನಡೆ ಬಳಿಕ ಗೆದ್ದು ...
news18



மனிஷ் சிசோடியா

துணை முதல்வர், டில்லி

டில்லியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் அலைமோதுகிறது. நோய்த்தொற்று பரவாதா?

மதுக்கடைகள் இன்று பொருளாதாரத்திற்கு முக்கியமான மையம் ஆக்கப்பட்டுவிட்டன. மதுப்புட்டிகளை வாங்குபவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் இருத்த முயல்கிறோம். நாங்கள் மது விவகாரத்தில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. துணிக்கடைகள் உள்ள இடங்களில் உள்ள மதுக்கடைகள் பிற கடைகள் போல திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் எப்படி பள்ளிக்குச் செல்வார்கள், புத்தகங்களைப் பெறுவார்கள் என்று இங்கு யாரும் கேட்பதில்லை. மது எப்படி பெறுவது என்று கேட்கிறார்கள்.

காவல்துறை மூலம் அதிகளவு மக்கள் கூட்டம் கூடிய இடங்களை மூடியுள்ளோம். முடிந்தளவு மக்கள் இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

உங்கள் மாநிலத்தில் அரசு பணியாளர்களுக்கு சம்பளவெட்டு உண்டா?

நாங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை தரவே முனைகிறோம். இதில் மத்திய அரசு தலையிட்டு உத்தரவுகளை பிறப்பித்தால் அதில் நாங்கள் மாற்றங்களைச் செய்ய முடியாது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் டில்லியை இயக்கி வந்தனர். அவர்கள் தங்கள் ஊருக்குச்சென்றுவிட்டால் பணியிடங்களுக்கான தேவையை எப்படி சமாளிப்பீர்கள்.

இப்போது டில்லியில் குறிப்பிட்ட துறைகள் இயங்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவிலே பணியில் இணைவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் தொழிலதிபர்களிடம் முழு சம்பளத்தொகையை கொடுக்குமாறு கூறியுள்ளோம். மேலும் அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு வாடகை வசூலிக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளோம். தொழில்துறையினரும் அதிக நாட்களுக்கு வருவாய் இன்றி சமாளிக்க முடியாது. எனவே, அரசு பல்வேறு துறையினர் பணி செய்வதற்கான விதிகளை தளர்த்தியுள்ளது. பெருந்தொற்று மாநில அரசு பேரிடர்காலங்களில் எப்படி தயாராக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் இப்போது முகாம்களில் உள்ளனர். அவர்கள் வீடு திரும்ப வசதிகளை செய்து கொடுத்துள்ளீர்களா?

இப்போது பத்தாயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். வீடு திரும்புவதற்கான வசதி டில்லி வந்துவிட்டு வேலைகளை செய்துவிட்டு ஊருக்குச் சென்றுவிடும் தொழிலாளர்கள், பக்தர்கள், தொழிலதிபர்களுக்கு மட்டுமே உண்டு. இங்கேயே ஆறு மாதம் தங்கி தொழில் செய்பவர்களுக்கு அந்த வசதியை மத்திய அரசு மறுத்துவிட்டது. நாங்கள் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அந்தந்த மாநில அரசுகளிடம் பேசி வருகிறோம். அவர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.

அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுகிறதா?

கோவிட் -19 தொற்று பிரச்னையால் நாங்கள் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் நிறுத்தி வைத்துள்ளோம். டில்லி நுகர்வுக்காக, வணிகத்திற்கான நகரம். உற்பத்திக்கான விஷயங்கள் இங்கு நடைபெறவில்லை. எனவே மத்திய அரசு விதிகளை தளர்த்தி பிறகும் கூட சில மாதங்களுக்கு அரசு பணிகள் எதுவும் நடைபெறாது. கட்டுமானப்பணிகளும் நடைபெறாது. அதற்குப்பிறகுதான் அவை வேகம் பிடிக்கும்.

மத்திய அரசு நிறைய விதி தளர்வுகளை அறிவித்திருக்கிறதே, டில்லி பழையபடி வேலைகளை தொடங்கிவிடுமா?

வணிக மால்கள், கன்னாட் பிளேஸ், நேரு பிளேஸ் ஆகியவை இப்போதைக்கு திறக்கப்படாது. டில்லி இப்போதும் சிவப்பு மண்டலமாகவே இருக்கிறது. மே 17க்குப் பிறகு நிறைய விதிகள் தளர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் மாநிலத்தின் ஜிஎஸ்டி வருமானம் எப்படியுள்ளது?

இந்த ஆண்டு வரி வருமானம் 400 கோடி மட்டுமே வந்துள்ளது. கடந்தாண்டு நாங்கள் 3500 கோடி ரூபாய் வசூலித்தோம். எங்களது மாநில அரசு ஊழியர்கள் சம்பளமே 3500 கோடி ரூபாய் வரும். அரசுக்கு தற்போது கிடைத்துள்ள 10 சதவீத வருமானத்தை வைத்து ஊதியத்தை எப்படி வழங்குவது என்று தெரியவில்லை.

வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகரிக்குமே?

ஊடரங்கு காலத்தை மத்திய அரசு அறிவித்ததும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊரை நோக்கி மாநிலங்களை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டனர். மீதியுள்ளவர்கள் நாங்கள் எங்களது முகாம்களில் தங்கவைத்துள்ளோம். தினசரி 11 லட்சம் உணவுப்பொட்டலங்களை மாநில அரசு அவர்களுக்கு காலை, இரவு உணவாக வழங்கி வருகிறது. நகரம் ஊரடங்கில் இருந்தால் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ அத்தனையையும் நாங்கள் அனுபவித்து வருகிறோம். வீட்டிலிருந்து பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முறைசாராத பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பது உற்பத்தித்திறனை வீணடிப்பதே ஆகும்.

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

ஆங்கிலத்தில்: ஸ்வேதா கோஸ்வாமி, சிவானி சிங்

 

 

 

கருத்துகள்