உலக நாடுகளை தலைமையேற்று நடத்துவதை அமெரிக்கா சுமையாக கருதுகிறது! பேராசிரியர் யான் சுவா டாங்











China, Flag, Country, Nationality, Square, Button
pixabay






உலகம், வலிமையான தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை!

யான் சுவாடாங், வெளியுறத்துறை பேராசிரியர், சிங்குவா பல்கலைக்கழகம் சீனா.


பெருந்தொற்று சூழ்நிலை வலிமையான உலக நாடுகளிடையே எந்த விஷயத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது?


கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உலகம் சரியான ஊக்கமும் உத்வேகமும் கொண்ட தலைமையின்றி தவித்து வருகிறது. பெருந்தொற்று காலம் இந்த கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதை தேவையில்லாத சுமை என்று கருதுகிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். பிற நாடுகள் தலைமை தாங்குவதற்கான வளம் அல்லது மனம் என இரண்டுமே இல்லாமல் இருக்கின்றன. அதிகாரப்போட்டியில் சீனா, அமெரிக்கா தீவிரமாக போரிட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த தலைமைப் பொறுப்பை பிற நாடுகள் ஏற்க முன்வருமா என்பதும் கூட சந்தேகமே.


தனது நாட்டை ஓர் நாடு வலிமையாக வைத்திருப்பதும், வழிநடத்துவதும் முக்கியம் என்று உங்கள் நூலில் கூறியிருக்கிறீர்கள். உலக நாடுகளை பெருந்தொற்று எப்படி பாதித்துள்ளது?


ஓர் நாடு எப்படி தன் நாட்டு மக்களை பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீட்கிறது, அதற்கான செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி பிற நாடுகள் கவனிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்காவில்தான் பெருந்தொற்று பாதிப்பு அதிகம். இந்த மக்களுக்கான சிகிச்சை விஷயங்களிலும் அமெரிக்கா தோல்வி அடைந்துவிட்டது. உலக நாடுகளிலேயே அமெரிக்கா வலிமையான நாடாக இருந்ததால், அதனை அனைத்து நாடுகளும் கவனித்து வந்தன. இப்பிரச்னையை சமாளிக்க தெரியாமல் அமெரிக்கா தடுமாறி வருவதால், நிறைய நாடுகள் அதன் மீது எதிர்மறையான கருத்துகளையே கொண்டுள்ளன. நேர்மறையாக கருத்துகளைக் கொண்ட நாடுகள் மிக குறைவே.


சீனா, கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிரான வேகமான நடவடிக்கைகளை எடுத்து மக்களை மீட்டது. இதனால் உலக அரங்கிலும் நல்ல பெயரை எடுத்துள்ளது. அல்லவா?


மேற்சொன்ன அம்சங்களைக் கணக்கிலெடுத்தால் சீனா சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட குறைவு. மக்களை நோயிலிருந்து மீட்க எடுத்த நடவடிக்கைகளை பிற நாடுகளால் பாராட்டப்பட்டன. மேலும் ஏராளமான நாடுகளுக்கு மருத்துவ கருவிகளை, சாதனங்களை, மருந்துகளை சீனா வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து நோய் பரவியது என்ற பிற நாடுகளின் புகாருக்கு பதிலாக, தனது நாட்டில் அதுபற்றி ஆராய்ச்சி செய்வதற்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனத்தின் வழியாக சீன அரசு வழங்கியுள்ளது.


இப்போதுள்ள நிலைமையில் எந்த நாடு வலிமையாக உள்ளது.?


உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து நோய்த்த்தொற்றை எதிர்ப்பதில் பாடுபடுவது என சீனா உலகளவில் நல்ல பெயரை, புகழைப் பெற்றுள்ளது.

மேலும் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் செல்வாக்கை விட சீனா விரைவில் அதிக செல்வாக்கைப் பெறக்கூடும். உலக நிதி கண்காணிப்பகம், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 1.2 என கணித்துள்ளது. இன்று உலக வல்லரசு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் வளர்ச்சி எதிர்மறை திசையில் இருப்பதாக அந்நிறுவனம் கணித்துக் கூறியுள்ளது. சீனா, அனைத்து உலக அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.


சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நடைபெறும் பொருளாதார போரில் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

இந்தியா சீனாவை விட அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசு, அமெரிக்கர்களுக்கே முதலிடம் என்ற கருத்தை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இக்காரணத்தினால் இந்தியாவுக்கு அந்நாட்டிடமிருந்து பெரிய பயன்கள் கிடைக்கப்போவதில்லை. அமெரிக்க அதிபராக டிரம்ப் நீடிக்கும்வரை இந்தியா - சீனா உறவுகள் பெரியளவு மாறுதலுக்கு உட்படப்போவதில்லை.


நன்றி: தி இந்து ஆங்கிலம் 12.5. 20

ஆங்கிலத்தில்: ஆனந்தி கிருஷ்ணன்







கருத்துகள்