வேகமாக மருந்தை கண்டுபிடித்தால் அது நோயைத் தீர்ப்பதில் திறன் கொண்டிருக்காது - டெட் எம் ராஸ்







COVID-19 Swab Test


டெட் எம் ராஸ், ஜார்ஜியா பல்கலைக்கழகம், மருந்து மற்றும் நோய்தடுப்பியல் துறை இயக்குநர்


கோவிட் -19 நோய்த்தொற்றில் மருந்துகளை கண்டுபிடிப்பதில் என்னென்ன சவால்களை சந்தித்துள்ளீர்கள்?


பொதுவாக நோய்க்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க அதிக ஆண்டுகள் தேவை. பாக்டீரியா, வைரஸ் நுண்ணுயிரிகளை விலங்குகளிட,ம் சோதித்துப் பார்த்து பின்னர் அதனை மனிதர்களுக்கு கொடுத்து சோதித்த பின்னரே சந்தைப்படுத்துவார்கள். ஆனால் கோவிட் -19க்கான வைரஸ் எப்படி இருக்கும் என்று தெரியாமல் யூகமாகவே நாம் அதற்கு தடுப்பூசி கண்டறிய முயன்று வருகிறோம் என்பதே உண்மை. இந்த வகையில் ஹெச்ஐவி வைரஸை நம்மால் ஒழிக்க முடியாததற்குக் காரணம் இதுதான் என்று கூறுவேன். வானில் பறந்துகொண்டு இருக்கும் விமானத்தில் பழுதைக் கண்டுபிடிப்பது போல இப்பணி உள்ளது. கோவிட் -19 வைரஸூக்கான முன்மாதிரியாக சார்ஸ் 1, மெர்ஸ் ஆகியவற்றை நாம் கொண்டுள்ளோம்.


உலகம் முழுக்க கோவிட் -19க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒருங்கிணைந்த முயற்சியாக பார்க்கிறீர்களா?


போட்டி போட்டு மருந்துகளை கண்டுபிடிப்பது நல்லதுதான். மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட இந்த முயற்சி உதவும். ஆனால் பலகோடி ரூபாய் செலவழித்து மருந்துகளைக் கண்டுபிடிக்கும் மருந்து நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி தகவல்களை பிறருக்கு கூற மறுக்கிறார்கள்.மருந்துகளைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்தி நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற எண்ணம்தான் இதற்கு காரணம். அதனை தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் மக்களை அழிக்கும் கோவிட் -19 விஷயத்தில் அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த தகவல்களை பிற ஆராய்ச்சியாளர்களிடம் பகிர்ந்துகொண்டால் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் தேக்கம் ஏற்படாது.


மருந்துகளைக் கண்டுபிடிக்க குறிப்பிட்ட கால வரம்பு உண்டா?


தடுப்பூசி மருந்துகளை ஆராய்ச்சி செய்து சோதனை செய்து அதன் விளைவுகளை முழுமையாக அறிய பத்து ஆண்டுகள் தேவை. ஆனால் அனைத்து விஷயங்களையும் முறைபடி பின்பற்றி வேகமாக செய்தால் பதினெட்டு மாதங்களில் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துவிடலாம். அதனை மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் சந்தைப்படுத்தி நிறைய மக்களைக் காப்பாற்ற முடியும்.


வேகமாக மருந்து கண்டுபிடிப்பதில் என்ன பிரச்னை உள்ளது?


வேகமாக மருந்தைக் கண்டுபிடித்தால் அதில் நோய் தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். எளிதாக கண்டுபிடிக்கும் விஷயம் எப்படி சிறப்பாக இருக்கும்? அரசு தொடர்ச்சியாக நிதியுதவி செய்தால் மட்டுமே பொதுவுடமை தளத்தில் மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். மருந்து வெற்றியடையவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் திறன் குறைந்த மருந்துகள் நோயை விரைவில் தீர்க்காது. ஆராய்ச்சியில் ஈடுபட்டுத்தான் மருந்தை வலுவாக்க முடியும்.


தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் வயது முக்கியப் பங்கு வகிக்குமா?


குழந்தைகள், வயதானவர்கள் ஆகிய இருவருக்குமான தடுப்பூசிகள் என்பது கடினமானது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு அப்போதுதான் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும். முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே வரும். இளைஞர்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். இதனால் மருந்துகளை இளைஞர்களுக்குத் தயாரிப்பது எளிமையானது. இன்ஃப்ளூயன்சா வைரஸூக்கான மருந்தை இளைஞர்களுக்கு ஒரே மாதிரியும், வயதானவர்களுக்கு டோஸ் அதிகமாகவும் தயாரித்து வழங்கினர். இதில் நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவிக்கும் பகுதிப்பொருட்களும் சேர்ப்பது உண்டு.


நீங்கள் இப்போது என்ன ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள்?


எனது தலைமையிலான குழு இன்ஃப்ளூயன்சா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை இருபது ஆண்டுகளாக தயாரித்து மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இம்மருந்தை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றபடி தயாரித்து வருகிறோம். கொரோனா வைரஸ் ஆராய்ச்சியிலும் நாங்கள் மேற்சொன்ன தடுப்பூசிக்கான வழிமுறையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம். இதற்கான முதற்கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.


விரைவில் கோவிட் -19 மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பிற திட்டங்கள் என்னாகும்?


சிறப்பான நோய்தடுக்கும் மருந்து மலிவான விலையில் கிடைத்தால் அதுதான் சந்தையில் சிறப்பாக விற்கும். இதற்கு இன்ஃப்ளூயன்சா மருந்து சிறப்பான உதாரணம். இம்மருந்து பல்வேறு மருந்து நிறுவனங்கள் விற்று வருகின்றனர். முதலில் கண்டுபிடிக்கப்படும் மருந்தும் சிறப்பாக சந்தையில் விற்கப்பட வாய்ப்பிருக்கிறது.


நன்றி: எகனாமிக் டைம்ஸ் - மேகஸின்


ஆங்கிலத்தில்: ஜி. சீதாராமன்




கருத்துகள்