ஆல்கஹால் காதலனும், ஈகோ கொண்ட காதலியும் ஒன்று சேருவார்களா? சல் மோகன் ரங்கா!
தெலுங்கு நியூஸ் |
சல் மோகன் ரங்கா
எழுத்து - திரிவிக்ரம்
இயக்கம் - கிருஷ்ணா சைதன்யா
இசை - தமன்
ஒருமுறை வாழ்க்கையில் நடக்கும் விஷயம் அடுத்தமுறை நடக்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் இருமுறை நடக்கும் விஷயம் அடுத்த முறையும் நடக்கும் என்று சொல்லுவார்கள். அதனை மோகன் முழுமையாக நம்புகிறான். இதனால் அவனுக்கு பிடித்த சிறுமி அமெரிக்காவுக்கு செல்ல, இவனும் முடிவு செய்கிறான். அமெரிக்கா செல்வதற்கு படிப்பை காரணம் சொல்ல முடியாது. பாதாளத்தில் கிடைக்கும் மார்க்கையும், மூன்றாவது கிளாஸ் தேர்ச்சியில் கிடைத்த பட்டத்தையும் வைத்து அங்கு செல்ல முடியாது என்பது விரைவில் மோகனுக்கு புரிகிறது. அதற்காகவே அவரது காலனியில் உள்ள சரோஜா என்ற அம்மாள் இறந்துவிட அவர்களது உடலை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறேன் என்று சொல்லி விசா பெற்று அமெரிக்கா செல்கிறான் மோகன். அங்கு செலவழிப்பதற்கான பணத்தையும் நண்பனிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு செல்கிறான். அமெரிக்காவுக்கு சென்றால் அங்கு அறிமாகும் நண்பன் வேலை கிடைக்க உதவுகிறான். விசாவுக்கான பணம் திரட்ட மேஹா என்ற பெண் உதவுகிறாள். அழகாக வேறு இருக்கிறாள். இது போதாதா காதல் வருவதற்கு?
ஆனால் மேஹாவின் அம்மாவிற்கு காசு இருக்கிற செட்டிலான ஆள்தான் தன் மகளை கவனமாக காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். இதனால் எப்பாடுபட்டாலும் தனக்கு பெண்ணைக் கொடுக்க மாட்டார்கள் என்று மோகனுக்கு தோன்றுகிறது. அதற்குள் மேஹா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்றுவிடுகிறாள். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், இது சரிதானா என்று பல கேள்விகள் எழ, காதலை தள்ளி வைக்கிறார்கள். இறுதியில் காதல் கைகூடியதா? இல்லை காதலியின் கல்யாணத்திற்கு மொய் எழுதும் பாக்கியம்தான் மோகனுக்கு கிடைத்ததா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஹா
மோகனாக நிதின் ஜாலியாக நடித்திருக்கிறார். காமெடி முதல் பகுதியை விட இரண்டாம் பகுதியில் அதிகம். மேஹாவின் கல்யாணம் நின்றுபோய் நடக்கும் களேபரம் அனைத்திலும் வெடித்து சிரிக்கலாம். மேகா ஆகாஷ் உணர்வுகளை வெளிப்படுத்த நிறைய மெனக்கெட வேண்டும். இருந்தாலும் அவர் இருந்தாலே பிரேம் அழகாக இருக்கிறது. விட்டுவிடலாம். ராவ் ரமேஷ், நரேஷ், பிரகதி என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிளைமேக்ஸ் காட்சியும் வசனமும் நன்றாக இருக்கிறது.
ஐயையோ
ஒரு போன் செய்தால் அனைத்து விஷயங்களையும் மேஹா, மோகன் புரிந்துகொண்டிருக்கலாம். நமக்கும் நேரம் மிச்சமாகி இருக்கும். இதில் குடும்பம் சார்ந்த காட்சிகள் குறைவு. நிறைய மதுபானக் காட்சிகளை வைத்துவிட்டார்கள். அனைத்தையும் காமெடி மறக்கடிக்க முடியாது அல்லவா?
கருத்துகள்
கருத்துரையிடுக