தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள்! - மாலினி அய்சோலா


Pill, Medicine, Closeup, Addiction, Desktop, Pain, Drug
pixabay




மருத்துவச் சூழலைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் லாபம் பார்க்கின்றன

மாலினி அய்சோலா, துணை நிறுவனர், அனைத்திந்திய மருந்துகள் இயக்கம்

பெருந்தொற்று கால தனியார் மருத்துவ சேவைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பெருந்தொற்று சார்ந்து சிறப்பாகவும் தீவிரமாகவும் உழைத்து வருபவர்கள் அரசு மருத்துவமனை சார்ந்த ஊழியர்கள்தான். அவர்களை மனமார இதற்கு நான் பாராட்டுகிறேன். தனியார் மருத்துவமனைகள் முடிந்தளவு இந்த விவகாரத்திலிருந்து எவ்வளவு காசு சம்பாதிக்கலாம் என்றே நினைக்கிறார்கள் பல மாநிலங்களிலுள்ள தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய மருத்துவமனைகளை எதற்கு வம்பு என்று மூடிவிட்டார்கள். இதனால் பல்வேறு நகரங்களிலுள்ள நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பு அரசு மருத்துவமனைகளின் தோளில் விழுகிறது. அப்படி நோயாளிகளை கவனிக்க நேரிட்டாலும் அவர்கள் அதிகளவு சிகிச்சை கட்டணத்தை வாங்குகிறார்கள். முறையான அரசு விதிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை. இதன்மூலம் நோய்த்தொற்று மருத்துவமனை ஊழியர்களுக்கும் பரவிவருகிறது.

மருத்துவமனைகள் அதிக கட்டணங்களை வசூலிப்பது இப்போது தினசரி செய்தியாகி வருகிறது..

அண்மையில் மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துமவனை கோவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை கட்டணமாக 4.5 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது. இதில் இதர செலவுகள் என்று சொல்லி மட்டும் 2.5 லட்ச ரூபாயை கட்டணமாக வாங்கியுள்ளது. இதுபற்றி மேலதிக விளக்கங்களையும் நிர்வாகம் சொல்லவில்லை. இந்த பில்தான் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் அரசின் எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் இப்படி கட்டணம் வசூலித்து வருகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களுடையதாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. இவர்கள் மருந்துகள், பல்வேறு சாதனங்களில் அடிக்கும் கமிஷன் பற்றி முன்னர் மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் இந்த தனியார் மருத்துவமனைகளில் லாபம் சுபம் பாதையில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

தங்களின் கட்டணங்களை இவர்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள்?

வரலாற்று ரீதியாகவும் இதனை நாம் கண்டுபிடிக்கமுடியாது. சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. இவர்களின் மருத்துவமனை பிரிவுகள், ஆய்வகம் ஆகியவையும் இப்படித்தான் வெளிப்படைத்தன்மை இன்றி இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் செய்த முயற்சிகள் என்பது மிகவும் குறைவுதான்.

பெருந்தொற்று நோய் சோதனைக்கு அரசு 4, 500 ரூபாய் வாங்குவது அதிகமான கட்டணமாக தெரிகிறதே? பிற நாடுகளில் கூட இதைவிட குறைவான கட்டணம்தானே வாங்குகிறார்கள்.

அரசு வாங்கியுள்ள சோதனைக் கருவிகளின் விலை 740 முதல் 1500 வரை வருகிறது. பிசிஆர் சோதனைக்கு 1500, நோய்த்தொற்றை உறுதி செய்வதற்கு 3000 என்கிறார்கள். இந்த தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதே தொகையை தனியார் மருத்துவமனைகளும் ஆய்வகங்களும் ஏற்று சோதனைகளைச் செய்துவருகின்றனர். மாநில அரசுகள் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் சோதனைகளைச் செய்தாலும் 4500க்கு குறைவான தொகையில்தான் சோதனைகளை செய்து வருகின்றனர்.

நன்றி: மும்பை மிரர்

ஆங்கிலத்தில்: அர்னாப் கங்குலி 


 

கருத்துகள்