இழந்த தங்கத்தை மீட்க போராடும் கொள்ளைக் கூட்டம் - தி இத்தாலியன் ஜாப்



The Italian Job' TV Series in the Works at NBC | TVLine
டிவிலைன்





தி இத்தாலியன் ஜாப்

இயக்கம் எஃப் கேரி கிரே

ஒளிப்பதிவு வேலி ஃபிஸ்டர் 

இசை ஜான் பாவெல்

வெனிசில் தங்க கட்டிகளை சார்லி தலைமையிலான குழு நூதனமாக கொள்ளையடிக்கிறது. அதற்கான பிளான் போட்டுத்தரும் பலரையும் சார்லி ஒருங்கிணைக்க, லாக்கரை திறக்கிறார் ஜான் பிரிட்ஜ். இவர்தான், இந்த தங்க கட்டிகளை கொள்ளையடிப்பதற்கான துப்பை சார்லியிடம் கொடுக்கிறார். சார்லி, சீனியரான ஜான் பிரிட்ஜ் மீது ஏக பிரியமாக இருக்கிறான். அதற்கு அவருக்கு அழகான மகள் ஸ்டெல்லா இருப்பது மட்டும் காரணமல்ல. அவரின் அனுபவம் தனக்கு பயன்படும் என்று நினைக்கிறான். ஆனால் தங்கம், பெண், நிலம் யார் மனதையும் சபலப்படுத்திவிடும் அல்லவா? அப்படித்தான் அந்த குழுவிலுள்ள ஸ்டீவ் மனதை சஞ்சலமடைய வைக்கிறது. எனவே அவன் ஒரு குறுக்குத்திட்டம் போட்டு சார்லி குழுவை துப்பாக்கியால் சுட்டு ஆற்றுக்குள் தள்ளிவிட்டு தங்கத்தோடு வெனிசிலிருந்து தப்புகிறான். இந்த தங்கத்தை எப்படி சார்லி குழுவினர் மீட்டார்கள் என்பதை பரபரவென திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கின்றனர்.


மார்க் வால்பெர்க் தான் சார்லி. ஒவ்வொருவரின் பணி பற்றி ஸ்டெல்லாவிடம் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி அறிமுகம் செய்வதே அழகு. ஜேஸன் ஸ்டாதம் உள்ளிட்ட திறமையான ஆட்களை ஒருங்கிணைத்து தங்கத்தை கடத்த முயல்கிறான். ஒருகட்டத்தில் ஸ்டெல்லாவை ஜான் பிரட்ஜின் மகள் என்று ஸ்டீவ் அடையாளம் கண்டுபிடிக்க அப்புறம் எப்படி தங்கத்தை திறமையாக கடத்தினார்கள் என்பதுதான் பரபரக்கும் இறுதிக்காட்சி.

முதல் காட்சி தொடங்கி படத்தின் இறுதிக்காட்சி வரைக்கும் படம் திகுதிகுவென செல்கிறது. எட்வர்ட் நார்டன்தான் ஸ்டீவ் பாத்திரத்தில் அசராமல் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் தி இத்தாலியன் ஜாப் என்ற பெயரில் இங்கிலாந்தில் வெளியானது. இதனை இயக்கியவர் ட்ராய் கென்னடி மார்ட்டின். அதனை திரும்ப எடுத்திருந்தாலும்  இப்படம் உங்களை படபடக்க வைக்கும்.

நன்றி: மிஸ்டு மூவிஸ் வலைத்தளம். 


கருத்துகள்