நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்
நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது. நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவ...