இடுகைகள்

ஆன்லைன் திருட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைன் திருட்டில் முந்தும் தமிழ்நாடு!

படம்
உங்கள் போனிலும் பிராமணத் தமிழ் பேசி, டெபிட் கார்ட்டின் நம்பர்களை கேட்டு பேங்க் மானேஜரே பேசியிருப்பார். அதை நீங்கள் நம்பாமல் இருந்தால் உங்கள் பணம் தப்பிக்கும். இதை எழுதும் எனக்கும் இதே போல அழைப்புகள் ஒருமுறை வந்தது. நான் அதை அலட்சியப்படுத்தினாலும், அருகிலுள்ள லே அவுட் நண்பர் இந்த அழைப்புகளை டைம்பாசுக்காக பயன்படுத்துவார். எப்படி என்றால் கேள்விகள் கேட்டு பேசிக்கொண்டே இருப்பார். இப்படி எங்கள் ஆபீசிலுள்ள பத்து பேர் கேள்விகளைக் கேட்டு அந்த குளறுபடி ஆட்களை குழப்பி அடித்த கதை உண்டு. ஆனால் பலரும் அதை உணமை என நம்பி எண்களைக் கொடுத்து ஏமாறுவதை நாம் தந்தியில் படித்து வருகிறோம். 2016- 19 காலகட்டத்தில் தமிழ்நாடு இதுபோல போலி அழைப்பு, கடன் அட்டை போலி தயாரிப்பு ஆகியவற்றால் நிறைய பணத்தை கோட்டை விட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு போலீசார், கடன் அட்டைகளை போலியாகத் தயாரித்த பல்கேரிய குழுவை  வலைவீசி பிடித்தனர். அவர்களிடமிருந்து வழக்கமாக சீஸ் செய்யும் ஸ்கிம்மர் கருவிகளையும் காந்த டேப்புகளையும் கண்டுபிடித்தனர். பணத்தை இழந்த வகையில் முதலிடத்திலும், போலி அழைப்ப