இடுகைகள்

வடகொரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புற்றுநோயால் அவதிப்படும் ஹோட்டல் அதிபரின் பேரனாக நடிக்கும் நாடக நடிகர்! - கர்டைன் கால்

படம்
  கர்டைன் கால் - கே டிராமா   கர்டைன் கால் கே டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   நாக்வோன் ஹோட்டல் தலைவரான ஜேயும் என்ற பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாத கெடு விதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவர் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு வந்து ஹோட்டல் வைத்து வெற்றிபெற்று பணக்காரர் ஆனவர். வடகொரியாவில் அவருக்கு கணவரும், யுன் ஜூன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவர்களை தென்கொரியாவுக்கு கூட்டி வர நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பேரன் முன் சாங்கையேனும் கூட்டி வந்து நல்ல முறையில் வாழவைக்க நினைக்கிறார். இதற்காக அவரது மேனேஜர் முன் சாங்கை தேடுகிறார். முன் ஜாங் கிடைக்கிறார். ஆனால்,   அவர் வன்முறையான பணத்திற்கு எதையும் செய்யும் அடியாளாக இருக்கிறார்.   இதனால் மிரண்ட மேனேஜர் நாடக நடிகர் ஜேனை காசு கொடுத்து பேரனாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவரும் காசுக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவரது நாடகஅரங்கு தோழியான யுன் ஹூய்யும் சேர்ந்து கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். இவர்கள் போலியானவர்கள் என ஹோட்டல் தலைவர் பெண்மணி, அவரது பேரன், பேத்திகள் கண்டுபிடித்தார்களா என்ப

காதலியைத் தேடுவதற்காக தண்ணீர் கேன் போடும் இதய அறுவைசிகிச்சை வல்லுநர்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

படம்
                    டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Written by: Park Jin-woo, Kim Joo Directed by: Jin Hyuk, Hong Jong-chan     தண்ணீர் கேன் விற்பனை செய்பவன் , குழந்தையின் உடைந்த விரலை சரி செய்கிறான் . குழந்தையின் அப்பாவுக்கு ஆபரேஷன் செ்ய்துவிட்டு மாயமாகிறான் . யார் அவன் என்பதை பார்வையாளர்கள் அறிந்தால் அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் . இந்த தொடர் வெறும் காதல் மட்டும் கொண்டது அல்ல . வடகொரியா , தென்கொரியா என இருநாட்டு அரசியலும் தீவிரமாக பேசப்படுகிறது . இதில் எதிர்மறையாக திடமாக காட்டப்படும் நாடு வடகொரியாதான் . இரு நாட்டு அரசியல்வாதிகளும் எப்படி மக்களை பயன்படுத்தி தங்கள் நலன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் , அதற்கு பலியாகும் மனிதர்கள் , அவர்களின் குடும்ப வாழ்க்கை என உணர்ச்சிகரமாக தொடரை எடுத்திருக்கிறார்கள் . பார்க் குவான் பள்ளி சென்று கொண்டிருக்கும் சிறுவன் . அவனது அப்பா , மியாங் சாங் மருத்துவமனையில் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரை வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வைக்க தென்கொரிய அரசியல்வாதி திட்டமிடுகிறார் . அப்படி அவர் அங்

வடகொரியா - தென்கொரியா போர்! - போர்விவரங்கள் காலக்கோடு வழியாக அறியலாம்!

படம்
          ny times       கொரியப் போர் ! 25 ஜூன் 1950 வடகொரியப் படைகள் தென்கொரியாவிற்குள் நுழைந்தன . 27 ஆம் தேதி ஐ . நா அமைப்பு தென்கொரியாவை காப்பாற்றுவதற்கான உதவியை பிற நாடுகளிடம் கேட்டது .22 இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் அங்கு விரைந்தன . 7 ஜூலை 1950 டக்ளஸ் மெக் ஆர்தர் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு படைகள் திரண்டன . கொரியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி படைகள் சென்றன . 7-9 அக்டோபர் 1950 அமெரிக்க படைகள் வடகொரியாவின் பகுதிகளை நோக்கி முன்னேறியது . அக்டோபர் - நவம்பர் 1950 சீனா , வடகொரியாவுக்கு ஆதரவாக கொரியப்போரில் குதித்தது . 14 மார்ச் 1951 ஐ . நா படைகள் தென்கொரியாவின் சியோல் நகரை முற்றுகையிட்டன . இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர் . 11 ஏப்ரல் 1951 அமெரிக்க படைத்தலைவர் டக்ளஸ் மெக்ஆர்தர் படைப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார் . 23-25 ஏப்ரல் 1951 ஜேம்ஸ் கார்ன் தலைமையிலான படை வடகொரியாவின் பகுதிளளை நோக்கி முன்னேறியது . 10 ஜூலை 1951 இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்தன . 28

சீனா மற்றுமொரு வடகொரியா நாடு போலத்தான் மாறும்!

படம்
தியான்மென் சதுக்கம் சூ யூயு அரசியல் அறிவியல் படித்த மாணவர். இவர், சீனாவில் கலாசார மாறுதல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டம் குறித்து எழுதியிருப்பதோடு, அங்கு கலந்துகொண்டும் இருக்கிறார். சார்ட்டர் 08 எனும் சட்ட தீர்திருத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மே 2014 ஆம் ஆண்டு செமினார் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் பேசினோம். தியான்மென் சதுக்க படுகொலைகளுக்கு இன்றோடு 30 ஆவது ஆண்டு. இதுபற்றி உங்கள் கருத்து. எனக்கு சோகமாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிருந்து வெளியேறியவர்கள் திரும்ப தாய்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. தியான்மென் சதுக்க கொலைகளுக்கு எதிரான ஜனநாயகப் பேரணி  இயக்கத்தில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்களா? ஆகஸ்ட் 15 -20 என்று நினைக்கிறேன். தேதி சரியான நினைவில்லை. அன்று படுகொலைகளுக்கு எதிரான அனைத்து கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். அரசு எங்களுடைய போராட்டங்களுக்கு செவி கொடுத்து நீதி கிடைக்கச்செய்யும் என

வடகொரிய பெண்களை சிதைக்கும் சீனர்கள்!

படம்
வடகொரிய பெண்களை வளைக்கும் சீனா சீனாவில் அகதியாக வாழ வரும் வடகொரிய பெண்களை செக்ஸ் தொழிலில் தள்ளும் மாஃபியா கும்பல்கள் அதிகரித்து வருவதாக கொரியா ஃப்யூச்சர் இனிசியேட்டிவ் எனும் திட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அகதியாக வாழ வழிதெரியாமல் வரும் பெண்களை திருமணம் என்ற போர்வையில் செக்ஸ் தொழிலில் தள்ளும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டாய திருமணத்தின் பேரில் பெண்களை வதைத்து செக்ஸ் தொழிலில் அவர்களை பலப்பிரயோகம் செய்து தள்ளி அதில் காசு பார்த்து வருகிறது இந்தக் கூட்டம் என பளிச்சென உண்மை பேசுகிறார் என்கிறார் ஆய்வாளர் யூன் கி சூன். எப்படி நடக்கிறது இந்த கொடூரம்? முதலில் இங்கு அகதியாக வாழ வரும் பெண்களை திருமணம் என்ற பெயரில் அணுகி மெல்ல மெல்ல வறுமையைக் காரணம் காட்டி சதை வணிகத்தில் இழுத்துவிட்டு அவர்களை சிதைக்கின்றனர். திருமணம் என்பது ஒரு சாக்குதான். மெல்ல இன்று வடகொரியாவிலிருந்து நேரடியாக பெண்களை செக்ஸ் தொழிலுக்கென இழுத்து வருவதும் அதிகம் நடைபெறுகிறது. வாழ வழியற்ற பெண்களுக்கு உடலே சாபமாகிற காரணம் இதுதான். வடகொரியாவிலுருந்து வரும் 60 சதவீத பெண்களில் 50 சதவீதப் பெண்கள் செக்ஸ்

சீனா, வடகொரியா உறவு எப்படி?

படம்
சீனா - வடகொரியா : இணைந்த கைகள் ! சீனா வடகொரியாவுடன் கொண்ட நட்பு குறித்து மக்களிடம் உரையாற்றிய மாவோ , உதடும் பற்களும் போல நெருக்கமான உறவு என்று குறிப்பிட்டார் . 1950 ஆம் ஆண்டு சீனாவின் மாவோ , கொரியா போரில் வடகொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து தன் நாட்டு ராணுவப்படைகளை யாலு ஆற்றுப்பாதை வழியாக அனுப்பி வைத்தார் . இப்போரில் துரதிர்ஷ்டவசமாக மாவோவின் மூத்த மகன் படுகாயமுற்று இறந்துபோனார் . 1961 ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கும் வடகொரியாவுக்குமான ஆயுத உறவு நெருக்கமானது . மேலும் வடகொரியா ஆட்சியாளர்களான இரண்டாம் கிம் சங் தொடங்கி அறுபது ஆண்டுகளாக வடகொரியா கம்யூனிச தோழர்களுடன் உறவை வளர்த்து வருகிறது சீனா . வடகொரியாவின் ஒட்டுமொத்த வியாபாரத்தில் சீனாவின் பங்கு 90 சதவிகிதம் . வியாபார மதிப்பு 6 பில்லியன் டாலர்கள் . எண்ணெய் முதல் விவசாயப்பொருட்கள் வரையிலான அனைத்து தேவையான பொருட்களையும் வடகொரியா சீனாவிடமிருந்து பெற்றுவருகிறது . 2006 ஆம் ஆண்டு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியபோது ஐ . நா சபை பொருளாதார தடைகளை விதித்தபோதும் சீனா தலையிட்டது . இதன் விளைவாக , தடை ஆணையின் வலு குறைந்துப