சீனா மற்றுமொரு வடகொரியா நாடு போலத்தான் மாறும்!







தியான்மென் சதுக்கம்

சூ யூயு அரசியல் அறிவியல் படித்த மாணவர். இவர், சீனாவில் கலாசார மாறுதல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டம் குறித்து எழுதியிருப்பதோடு, அங்கு கலந்துகொண்டும் இருக்கிறார். சார்ட்டர் 08 எனும் சட்ட தீர்திருத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மே 2014 ஆம் ஆண்டு செமினார் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் பேசினோம்.


தியான்மென் சதுக்க படுகொலைகளுக்கு இன்றோடு 30 ஆவது ஆண்டு. இதுபற்றி உங்கள் கருத்து.

எனக்கு சோகமாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிருந்து வெளியேறியவர்கள் திரும்ப தாய்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.

தியான்மென் சதுக்க கொலைகளுக்கு எதிரான ஜனநாயகப் பேரணி  இயக்கத்தில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்களா?

ஆகஸ்ட் 15 -20 என்று நினைக்கிறேன். தேதி சரியான நினைவில்லை. அன்று படுகொலைகளுக்கு எதிரான அனைத்து கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். அரசு எங்களுடைய போராட்டங்களுக்கு செவி கொடுத்து நீதி கிடைக்கச்செய்யும் என்பதே எங்களது நம்பிக்கை.

நீங்கள் பங்குகொண்ட இயக்கம் பின்னாளில் தோல்வியுறும் என்று நினைத்தீர்களா?

நான் அதை தோல்வி, வெற்றி என்று நினைக்கவில்லை. அந்த ஜனநாயக இயக்கம் தோன்றிய அந்த சூழலின் அவசியம். அது பின்னாளில் பல்வேறு விஷயங்களை உருவாக்க உதவியது. மாணவர்களின் குரல்களை ஒடுக்க பிரிவினைவாத சக்திகள் எழுந்ததுதான் சிக்கலாகிப்போனது. மற்றபடி அப்படி ஒரு நிலை தீவிரமடைந்து இருந்தால், இன்று இருப்பதை விட சூழல் பேரழிவானதாக மாறியிருக்கும்.

கடைசி நொடி வரை இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். அங்கு நிலைமை என்னவாக இருந்தது. 

மிகுந்த விரக்தியும் நம்பிக்கையின்மையும் மக்களிடையே பார்த்தேன்.

ராணுவம் டாங்கிகளுடன் வருவதை நீங்கள் அறிந்தும் ஏன் மாணவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. 

நான் மாணவர்களிடம் டாங்கிகளுடன் ராணுவம் வருவதைக் கூறி கல்லூரிக்கு திரும்ப எச்சரித்தேன். ஆனால் முன்னே இருந்த இரு மாணவர்கள், அரசு தன் மக்கள் மீதே தாக்குதல் நடக்குமா என்று பேசி எழவில்லை.

1989 உருவான ஜனநாயக இயக்கம், மாணவர்களுக்கானது என்றே இன்றும் பேசுகிறார்கள். அதைப்பற்றி..

அதில் ஆசிரியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பலரும் உண்டு. ஜனநாயக வழியில் பொறுமை அவசியம் என்று அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தனர்.


நீங்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கிறீர்களே. சீனா திரும்பும் ஆசை இல்லையா?

இங்கு ஆராய்ச்சிக்கான சூழல் அமைந்துள்ளது. இங்கு சிலகாலம் தங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். தாய்நாட்டை விட்டு தனியாக அயல் நாட்டில் இருக்கிறேன் என்று நான் நினைக்கவில்லை. சீனாவில் கலாசார புரட்சி ஏதும் நடைபெறாது. இந்நாடு வடகொரியாவின் வழியில் பயணிக்கிறது. நாளை மற்றுமொரு வடகொரியாவாக மாறி நிற்கும்.

நன்றி: குளோபல் வாய்சஸ்

தொகுப்பு: ஆஷா