தூங்கும்போது ஜெர்க் ஏற்படுவது ஏன்?











ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

தூங்கும்போது திடீரென கீழே விழுவது போல தோன்றுகிறதே ஏன்?


உலகிலுள்ள 70 சதவீதம் பேருக்கு நடைபெறும் இக்குறைபாட்டு பிரச்னைக்கு ஹைப்னிக் ஜெர்க் என்று பெயர். என்னுடைய நண்பர் தூங்கும் முதல் பத்து நிமிடம் உடல் மெல்ல துடிக்கத்தொடங்கும். பின் மெல்ல தூக்கத்தில் ஆழ்வார். இதுகுறித்து அவரிடம் விழித்தெழுந்தபின் கேட்டேன். கீழே விழுவது போன்று தோன்றியது என்றார்.

இதற்கு முக்கியக்காரணம், மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு சரியான வித த்தில் இல்லாத தே. இதனால் மூளை சோர்ந்துபோய் விட்டுர்ரா ங்கொய்யால எனும்போது உடல் நோ நோ நாளைக்கு நிறைய வேலை இருக்கு என உடல் இழுத்துப் பிடித்தால் அன்று இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வராது.


அளவுக்கு அதிகமான காஃபீன் பொருட்கள் மற்றும் அட்டரால், ரிடாலின் ஆகிய மருந்துகளைச் சாப்பிட்டாலும் இதுபோல தூங்கும்போது ஜெர்க் வரும் . இதனைக் குறைத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கேரண்டி.


நன்றி: க்யூரியாசிட்சி