உலகப்புகழ் பெற்ற உரைகள் - பேட்ரிக் ஹென்றி



Image result for patrick henry speech





உலகப்புகழ்பெற்ற பேருரைகள்

பிரிட்டிஷ் நாட்டு ராணுவம், அமெரிக்காவைத் தாக்கும் முயற்சியில் இருந்தது. அப்போது பேட்ரிக் ஹென்றி, தன் நாட்டு மக்களை போருக்கு ஆயத்தம் செய்யும்விதமாக உரையாற்றினார். உரையின் முடிவில் மக்கள் போர்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து கோஷமிட்டனர். காரணம், உணர்வுபூர்வமாக பேட்ரிக் ஹென்றி ஆற்றிய உரைதான்.

பேட்ரிக் ஹென்றி 1775 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர். அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாதான்(ரிச் மாண்ட்) இவரின் சொந்த ஊர்.

சுதந்திரத்தைக் கொடுங்கள் அல்லது இறப்பை பரிசளியுங்கள் - பேட்ரிக் ஹென்றி
தமிழில்: ச.அன்பரசு


 அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக என்னளவு இங்கு ஒருவர் சிந்தித்து செயலாற்றியிருக்க முடியாது. அதேசமயம் இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் ஒளியில் பார்ப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூடத்தான்.

இதில் நான் மேற்சொன்னவர்கள் மீது எந்த விமர்சனத்தையம் முன்வைக்க விரும்பவில்லை. மேலும் நாம் இன்றுள்ள சூழ்நிலையில் கொண்டாட்டத்திற்கு இடமில்லை. பொழுதுபோக்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. இன்றும் நம் நாட்டின் முன்னே சிக்கலான சூழலும் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கின்றன. சுதந்திரம் மற்றும் அடிமைத்தனம் ஆகிய பிரச்னைகளுக்கு சற்றும் குறையாததுதான் இது.

இதற்கு நாம் அளிக்கும் பதில்தான் இறைவன் மற்றும் அவரின் வல்லமையால் உயிர்வாழும் நம் நாடு பிழைக்கும் சாத்தியம் உள்ளது. நான் இந்த விஷயத்தில் இறைவருக்கு நேர்மையாகவும், என் மனசாட்சிக்கு நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கிறேன்.

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, இதுபோன்ற சூழ்நிலையில் நாம் நம்பிக்கைக்கான தன்மையை இயல்பாகவே தக்கவைத்துக்கொள்ளும் மாயத்தை உருவாக்குவோம். ஆனால் அது உண்மையல்ல. வலியுடன் உள்ள உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். கண்கள் இருந்தாலும் காட்சிகளைப் பார்க்காமல், காதுகள் இருந்தாலும் எதையும் கேட்காமல், மூளை இருந்தாலும் எதையும் ஆராயாமல் இருப்பது புத்திசாலித்தனமா? சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாம் வாழ்வை தியாகம் செய்வது சரியான புத்திசாலித்தனமான காரியம்தானா?

நாம் இந்த இடத்தில் இருந்து எதிர்காலத்தைப் பார்க்க ஒரே விளக்குதான் இருக்கிறது. அது இறந்த காலத்தில் நமக்கு கிடைத்த அனுபவம்தான். இந்த உண்மை நமக்கு மோசமாக தெரிந்தாலும் ஆபத்தாக இருந்தாலும் அதனை கூறுவது எனது கடமை.

நான் கூறுவதை நீங்கள் நம்ப முடியாதுதான். ஆனால் இது முத்தம் குடுத்து முதுகுக்கு பின்னே கத்தியை செருகுவதைப் போன்ற துரோகம் அல்ல. நீங்களே கூறுங்கள் போர்மேகங்கள் நாம் அருந்தும் குளங்கள், ஏரிகள், நிலங்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் நாம் மூர்க்கத்தனமாக போராடிவரும் எதிரிநாட்டு ராணுவத்துடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியுமா? ராணி போர்புரியும் முடிவை தீர்க்கமாக எடுத்து முன்னேறி வருகிறார். இதனை நாம் அவர்களுடன் சுமூகமாக செல்ல முயலவில்லையா? பத்து ஆண்டுகளாக அமைதிக்காக நாம் பாடுபட்டுள்ளோம். புயலைத் தவிர்ப்பதற்காக அத்தனை தடுப்பு யோசனைகளையும் முன்னரே செய்திருக்கிறோம்.


நாம் இதுகுறித்து முன்பே புகார்களை திரட்டி அளித்தும் நாம் அவமானப்பட்டதும், கூடுதல் வன்முறையைச் சந்தித்த தும்தான் மிச்சம். இத்தகைய நிகழ்ச்சிகள் நமக்கு அமைதி மீதிருந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன என்பதை நீங்களே அறிவீர்கள். இனியும் நாம் நம்பிக்கையோடு காத்திருக்க எந்த காரணங்களும் நம்மிடையே இல்லை. இனியும் நாம் சுதந்திரத்திற்காக அமைதியோடு காத்திருக்க முடியாது.

அதிபர் அவர்களே அவர்களை நாம் சமாதானத்தை விரும்புகிறோம் என்பதால் நம்மை பலவீனர்கள் என்று எண்ணுகிறார்கள். வேடிக்கை பேசி மகிழ்கிறார்கள். நாம் இனியும் அமைதி காக்க முடியாது. நாம் உறுதியாக சண்டையிட வேண்டும். இது ஒன்றே அமெரிக்காவின் இறையாண்மையைக் காக்கும் செயல். நாம் இதற்காக சண்டையிடத்தான் வேண்டும்.

நாம் பலமாகி எதிரியைத் தாக்க வேண்டும் என எதிர்பார்த்தால், நிச்சயம் அவர்கள் நம் நிலங்களை விட்டுவைக்கப் போவதில்லை. எனவே, நாம் ஆயுதங்களுடன் போரில் இறங்கவேண்டும். நாம் பலமாகித்தான் போரில் இறங்குவோம் என்றால் இந்த ஆண்டா அடுத்த ஆண்டா எப்போது அவர்களைத் தாக்கி பலமாவோம் என்று யாருக்கும் தெரியாது. நாம் தனியாகபோரிடுகிறோம் என யாரும் அஞ்சாதீர்கள். நாம் இறைவனின் துணையுடன்தான் போரிடுகிறோம். எனவே, நாம் தனியாக இல்லை.

நம்மிடையே உள்ள சில நல்லுள்ளங்கள் அமைதி, அமைதி என கரைந்து அழுகின்றனர். ஆனால் அமைதி என்பதற்கு இப்போது எந்த மதிப்புமில்லை. ஏனெனில் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அமைதி விரும்பிகள் இதற்காக வாழ்த்துக்களைச் சொல்வார்களா? அமைதி என்ற வார்த்தைக்காக நாம் நம்மை அடிமைகளாக்கி கொள்ள முடியாது. இறைவனின் திருப்பெயரால் நான் சுதந்திரத்தை அல்லது என் இறப்பையே பரிசாக கேட்பேன்.

உரையின் விளைவு:

மக்கள் ஆயுதங்கள் ஆயுதங்கள் என கத்த தொடங்கினர். அமெரிக்க புரட்சியைத் தொடங்கியதில் பேட்ரிக் ஹென்றி, சாமுவேல் ஆடம்ஸ், தாமஸ் பைன் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு.

நன்றி: அமிட்டி பல்கலைக்கழகம்