விவசாயிகள் தற்கொலை - மகராஷ்டிரா முந்துவது எப்படி?
விவசாயிகள் தற்கொலை
விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும் என தந்தி தலைப்புச்செய்தி இன்று சொல்லுகிறது. ஆனால் அதே தினத்தில் மகாராஷ்டிரத்தில் 808 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, தினசரி ஏழு விவசாயிகள் கடன்தொல்லை, சரியான விலை கிடைக்காத பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் 42 தாலூக்காக்களிலும் வறட்சி படமெடுத்து ஆடியதில் மக்களின் உயிர் பறிபோனதுதான் மிச்சம். ஆட்சியாளர்கள் எப்போதும்போல எண்களாக குறித்து வைத்துக்கொண்டனர். விதர்பா, மராத்வடா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இறப்பு நேர்ந்துள்ளது. விதர்பாவில் 344, மராத்வடாவில் 161, வடக்கு மகாராஷ்டிராவில் 244 என தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
விவசாயிகள் கடந்த ஆண்டு கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தினர். அதைக் கண்டுகொள்ளாதது போல இருந்த அரசு, தேர்தல் நெருங்கியவுடன் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்கு கிஷான் சம்மான் நிதி என்று பெயர் வைக்கப்பட்டது.
நன்றி: எகனாமிக் டைம்ஸ் - பிரியங்கா ககோட்கர்.