இடுகைகள்

விஜயகாந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

படம்
                தாயகம் விஜயகாந்த், ரஞ்சிதா இயக்கம் ஏ ஆர் ரமேஷ் இசை தேவா பாடல்கள் பிறைசூடன் காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை. படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும் ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவ