இடுகைகள்

ஜெயகாந்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை சிற்றிதழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் பயணம்! - மல்லிகை சிற்றிதழ்

படம்
                அனுபவப் பயணம்  டொமினிக் ஜீவா  நாவிதராக தொழில் செய்யும் ஒருவர் இலங்கையில் இலக்கிய இதழை நடத்தி வந்தார். அவர் பெயர்தான் டொமினிக் ஜீவா. இலங்கையில் சாகித்திய பரிசை முதன்முதலாக வென்ற எழுத்தாளர் இவரே. மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தனது அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.  தனது தொழில் சார்ந்து நிறைய லாபம் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு எழுத்தை தொழிலாக மாற்றிக்கொண்டு படாதபாடு பட்டிருக்கிறார். இதனை ஏன் எழுதவேண்டும் என்பதையும் நூலில் தெரிவித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள், அவதூறுகளை தனது கவனத்தில் கொண்டே எழுதியிருக்கிறார். மேலும் இதனை குறிப்பிட்ட அவதூறு எழுத்தாளரின் விழா மேடையில் தெரிவிக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட எழுத்தாளராக ஜீவா இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.  நூலில் நிறைய இடங்களில் தனது பெருமைகளை சொல்லுவது போல இடங்களை அதிகமாகிவிட்டன. சாதிரீதியான பாகுபாடு கொண்ட மனநிலை இப்படி ஜீவாவை பேச வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழகம் வந்து பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்சன், ஜெயகாந்தன் ஆகிய எழ