இடுகைகள்

இந்தியா - பாக். பிரிவினை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துயரத்தின் நிழலில்: இந்தியா - பாக். பிரிவினை

படம்
டிஜிட்டல் ரத்தசரித்திரம் ! - ச . அன்பரசு வரலாற்று சம்பவங்களை நூலாக பதிவு செய்வதை வரவேற்கலாம் என்றாலும் அதனை சுட்டியின் ஒரு க்ளிக்கில் அணுக முடியாது என்பது டிஜிட்டல் காலத்தில் குறைதானே ? 1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த இந்து , முஸ்லீம் என இரு தரப்பினருக்கும் நடந்த வன்முறைக் கலவரங்களின் ரத்த ஈரத்தை சதத் ஹசன் மண்டோ , குஷ்வந்த்சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் நூல்களில் வேதனையும் கண்ணீருமாக எதார்த்தமாக பதிவு செய்துள்ளனர் . இதுதொடர்பாக அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் தேடிப்பெற 1947 ஆர்ச்சீவ் என்ற தன்னார்வ அமைப்பு உதவுகிறது . உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அதனை நேர்காணல் , திரைப்படம் , நூல்கள் , ஆவணப்படம் வழியாக அறிய 1947partitionarchive.org எனும் இணையதளம் உதவுகிறது . இத்தகவல்தளத்தை 1947 ஆர்ச்சீவ் எனும் தன்னார்வ தொண்டுநிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது . " இத்தளத்தில் பிரிவினை பற்றி மட்டுமல்ல பிரிவினைக்கு முன்னிருந்த இந்திய வாழ்க்கை குறித்த தகவல்களையும் மக்கள் வீடியோ , ஆடியோ , நேர்காணல் வடிவில் பதிவு செய்யலாம் " என்கிறார்