இடுகைகள்

சினிமா விமர்சனம் அனிமேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமியின் கற்பனையில் உருவாகும் அழகிய தீம்பார்க்கின் வில்லன் யார்? வொண்டர் பார்க்

படம்
    வொண்டர் பார்க் Director: Dylan Brown   Screenplay by: Josh Appelbaum, André Nemec   ஜூன் என்ற சிறுமி கற்பனையாக ஒரு தீம் பார்க்கை உருவாக்குகிறாள். அவளும் அவளது அம்மாவும் சேர்ந்து லீகோ வகை பொம்மைகளை சேர்ந்து உருவாக்குகிறார்கள். அவள் வைத்துள்ள பீநட் என்ற குரங்கு பொம்மையின் காதில் தான் செய்யும் அனைத்தையும் சொல்லுவது ஜூனுக்கு பிடிக்கும். ஜூனுக்கு தெரியாமல் அவள் தன் ஐடியாவைச் சொல்ல சொல்ல அவள் நினைத்தபடியே தீம்பார்க் உருவாகி இயங்கி வருகிறது. இது ஜூனுக்கு தெரியாது. இந்த நிலையில் ஜூனின் அம்மாவுக்கு உடல் நிலை சீர்கெட, தீம்பார்க் வேலையை விளையாட்டாக கூட செய்யாமல் தூக்கி எறிகிறாள். அதனை செயலிழக்கச்செய்யும் வில்லனை  உருவாக்குகிறாள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அவளே பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த பிரச்னைகளை எப்படி தீர்க்கிறாள் என்பதுதான் கதை. ஃபேன்டசிதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு நாம் சமநிலையான சூழலில் மனநிலையை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கும்போது செய்யும் அனைத்து விஷயங்களையும் மோசமான நிலையில் இருக்கும் போது செய்யும் ஒரு விஷயம் கலைத்துப்போட்டுவிடுவது பற்றி

எனக்குள் நீ, உனக்குள் நான் - உன்பெயர்தான் என்ன? யுவர் நேம் - அனிமேஷன் -ஜப்பான்

படம்
யுவர் நேம் அனிமேஷன் படம் இயக்குநர்: மகோடா ஷின்காய் திரைக்கதை: மகோடா ஷின்காய் இசை: ராட்விம்ஸ் ஜப்பானினின் டோக்கியோவிலுள்ள பள்ளி மாணவன் டக்கி டச்சிபானா, கிராமத்திலுள்ள பள்ளி மாணவி மிட்சுவா மியாமிசு என்ற இருவரின் ஆன்மாக்களும் இடம்மாறுவதுதான் கதை. டக்கி, மிச்சுவா ஆகியோரின் உடலில் இருவரின் ஆன்மாக்களும் மாறி மாறி உட்கார இருவரின் வாழ்க்கையும் உலகைப் பார்க்கும் பார்வையும் கூட மாறுகிறது. ஆணின் உடலில் பெண், பெண்ணின் உடலில் ஆண் என சில மாதங்களுக்கு மாறி மாறி இச்செயல்பாடு நடைபெற இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குகின்றனர். செய்திகளை நோட்டு புத்தகம் வழியாக, கைகளின் வழியாக பரிமாறிக்கொள்கின்றனர். இந்த நேரத்தில் மிட்சுபாவின் கிராமம் விண்கல் ஒன்றால் அறியும் செய்தியை டக்கி அறிகிறான். இதனை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோற்றுப்போகிறது. இருவரைப் பற்றிய எண்ணங்களும் மெல்ல அழியத்தொடங்குகின்றன. இறுதியில் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இறுதிப்பகுதி.   படம் முழுக்க சூரியனின் ஒளி ஓர் கதாபாத்திரமாகவே வருகிறது. படத்தில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத

அன்பு செய்ய குடும்பம் தேவை - தி வில்லபிஸ்

படம்
showbox தி வில்லபிஸ் நெட்பிளிக்ஸ் அனிமேஷன் இயக்கம்: கிரிஸ் பியர்ன் எழுத்து: ரிக்கி ஜெர்வைஸ் மூல நூல்: தி வில்லபிஸ் - லூயிஸ் லோரி ஒளிப்பதிவு - செபாஸ்டியன் பிராடின் இசை:  மார்க் மதர்ஸ்பாக் பெற்றோரின் அன்பு கிடைக்காமல் வாடும் ஐந்து குழந்தைகளின் கதைதான் தி வில்லபிஸ் அனிமேஷன் படம். பெற்றோர் வில்லபி வம்சாவளியைச்சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அன்பு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க விரும்பவில்லை. குழந்தைகளை தனித்தனி அறைகளில் விட்டுவிட்டு தங்களைப் பற்றி மட்டுமே யோசித்து வாழ்கின்றனர். இவர்களை வெளியே அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக வாழலாம் என்கிறான் டிம். அதனை தங்கை ஜேனும், இரட்டையர்களான பார்னபியும் அப்படியே ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு முன் அவர்களுக்கு பிறந்த தங்கை ரூத்தை நகரத்தின் மூலையிலிருந்த மெலனாஃப் என்ற மிட்டாய் தொழிற்சாலைக்கு கொண்டு போய் விட்டு வந்துவிடுகிறார்கள். தங்கை ஜேனுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அப்படி விட்டுவந்தால்தான் அவர்கள் தங்கள் வீட்டில் வாழ முடியும் சூழ்நிலை. இந்நிலையில் பெற்றோரை மிக அபாயகரமான இடங்களுக்கு டூர் அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக நம் வீட

டிஸ்னி படத்தை கிண்டல் செய்யும் ஹோம்வர்டு அனிமேஷன் படம்!

படம்
Cartoonbrew ஹோம்வர்ட் அனிமேஷன் திரைப்படம் இயக்குநர் : மைக்கேல் ஜான்சன் ஆர்க், எல்ஃப் என்ற இரு இனத்திற்கும் உள்ள வேறுபாடு தீவிரமான போராக மாறுகிறது. இதனை இரு இனத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் சேர்ந்து அமைதிக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த அமைதியை ஆர்க் இனத்தைச் சேர்ந்த படைத்தளபதியின் வம்சாவளியினரான ரோல்ஃப் விரும்பவில்லை. ஆர்க் இனத்தின் சக்திக்கு காரணமாக கற்கள் இரண்டு சிலைகள் பொதிந்து வைக்கப்படுகின்றன. அவற்றை எடுக்க எல்ஃப் இனத்தின் மந்திரப்பை தேவைப்படுகிறது. லாய்டு, பார்ல் என்ற இரு சகோதரர்களுக்கு ஏற்படும் வேறுபாடு, ஒருகட்டத்தில் பெரும் மோதலாகிறது. இதனால் லாய்ட் தன்னுடைய பட்டமளிப்பு விழா கெட்டுவிடும் என்று தன்னுடைய தத்து சகோதரனை நியூ ஆர்க் லேண்ட் என்ற நகரத்திற்கு கொண்டு சென்று விடுகிறான். ஆனால் அங்கு நேரும் தவறு, நியூ ஆர்க் நகரம் மற்றும் எல்ஃப்டேல் நகரம் என இரு நகரங்களுக்கும் பேராபத்தாக மாறுகிறது. இப்பிரச்னையை எப்படி சகோதரர்கள் இணைந்து தடுக்கின்றனர், நகரத்தை எப்படி காப்பாற்றினர் என்பதுதான் கதை. படத்தின் முக்கியமான அம்சம், மனிதர்களுக்குள் வேறுபாடு கூடாது. அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழ வேண்டு