கள்ளக்காதல் கதையில் கொடூர கொள்ளை குழுவும் போதைப்பொருள் குழுவும் ஒன்றாக சேர்ந்தால்....
தகத்தே லே தெலுங்கு நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை, அனன்யா ராஜ், ரவிசங்கர் க்ரைம் திரில்லர் பவானி மூவிஸ் - யூட்யூப் சேனல் ஏ பிளஸ் சான்றிதழ் வாங்கக்கூடிய பாலுறவு, தீவிர வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம். படத்தில் மூன்று கதைகள் உள்ளது. ஒன்று இன்ஸ்பெக்டர் போதைப்பொருட்கள் குழுவை தேடி அலையும் கதை. இதில் அவர், சில டபுள் ஏஜெண்டுகளை போதைப்பொருள் கேங்கில் இருந்து விலைக்கு வாங்கி தகவல்களை வாங்கி அவர்களை பிடிக்க முயல்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மூலம் இன்னொரு வழக்கும் வருகிறது. அது ஒரு கொலை வழக்கு. இரண்டாவது கதை, கொலைவழக்கு.இதில் நாயகன் வீட்டில் கொலை ஒன்று நடக்கிறது. அவரது வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு ஹாலில் கிடக்கிறார். வயிற்றில் அலங்காரப் பொருள் ஒன்று துளைத்து சென்றிருக்கிறது. நாயகன், கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அங்குள்ள கைரேகைகளை துடைக்கிறார். தடயங்களை அழிக்கிறார். பிறகு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார். போலீசாரும் வந்து பெண்ணின் உடலை மீட்டு செல்கிறார்கள். தகவல் கொடுத்த நாயகன் மீது சந்தேகம் தோன்ற அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்...