இடுகைகள்

இந்தியா - பனஸ்தாலி பல்கலைக்கழகம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் பைலட்டுகளை உருவாக்கும் பனஸ்தாலி பல்கலைக்கழகம்!

படம்
ஆகாயத்தில் சிறகு விரிக்கும் பெண்கள் - ச.அன்பரசு பெண்களை நுகர்விற்கான பொருளாக பலரும் சித்தரிக்கும் நிலையில் கல்வி மட்டுமே பெண்களுக்கு சிறகு தரும் என்ற லட்சியம் மாறாது செயல்பட்டு வருகிறது ராஜஸ்தானிலுள்ள பனஸ்தாலி பல்கலைக்கழகம். பெண்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுத்து இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை அளிக்கும் இங்கு, பெண்களுக்கான விமானப் பயிற்சி மையம் தனித்துவமானது. 1935 ஆம் ஆண்டு ராஜஸ்தானிலுள்ள தோங் மாவட்டத்தில் பனஸ்தாலி வித்யாபீடம் தொடங்கப்பட்டபோது இதில் சேர்ந்த சிறுமிகளின் எண்ணிக்கை வெறும் ஏழுதான். ஆனால் தற்போது நாடெங்கிலுமிருந்து பதினாறாயிரம் மாணவிகள் இங்கு கல்வி கற்கின்றனர். 850 ஏக்கரில் 28 கட்டிடங்களோடு பிரமாண்டமாக ஆச்சரியப்படுத்துகிறது பனஸ்தாலி பல்கலைக்கழகம். ஜெய்ப்பூர் அரசின் செயலாளராக பணிபுரிந்த ஹீராலால், பனஸ்தாலி(அன்று பன்தாலி) கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்தார். அங்கிருந்த விவசாயிகளுக்கு கல்வி அறிவு புகட்ட தொடங்கியதுதான் பனஸ்தாலி வித்யாபீடத்தின் முதல்படி. "ஜாதி பேதமின்றி விவசாயிகளுக்கு கல்வி அறிவை வழங்குவதே தாத்தாவின் நோக