இடுகைகள்

தார் பாலைவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயில் காயும் பாலைவனத்தில் பழிக்குப்பழி! தார் - ராஜ் சிங் சௌத்ரி

படம்
  தார் ஹர்ஷ்வர்த்தன், அனில் கபூர் இயக்கம் ராஜ் சிங் சௌத்ரி வசனம் அனுராக் காஷ்யப் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு முகம் கை கால்கள் சிதைக்கப்பட்டு தூக்கில் தூக்கிக் கட்டப்படுகிறார். இதை விசாரிக்கிறார் சுரேகா சிங். அவர் விரைவில் இன்ஸ்பெக்டராக இருந்து பணி மூப்பு பெறவிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு இக்கொலை வழக்கு தலைவலியாக மாறுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்துக்கு பொருட்களை வாங்கி விற்பவராக இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் யார், எதற்கு அங்கு வந்தார், இறந்தவருக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதே படம்.  படத்தின் ஸ்பெஷலே, தார் பாலைவனம்தான். அதன் வறண்ட தன்மையும். அங்கு வாழ்பவர்களின் இரக்கமேயில்லாத தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் குணமும்தான் படத்தின் முக்கியமான அம்சம்.  டெல்லியில் இருந்து கதை ராஜஸ்தானுக்கு மாறி முழுக்க பாலைவனத்திலேயே நடக்கிறது. பழிக்குப் பழி கதைதான். அதை பாலைவனப் பின்னணி முழுக்க மாற்றி விடுகிறது. மேய்ச்சல் மாடுகள், ஆடுகள், இறந்து பாலைவனத்தில் கிடக்கும் மாட்டின் உ