பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!
வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில் ஜாக்கிரதை தேவை. பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது...