இடுகைகள்

முல்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!

படம்
  நரசிங்கபுரம் 24/1/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? வேலை இல்லாத சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல் பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது? சென்றவாரம் திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய நூல்கள் தவிர. வரும் மார்ச் பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும்.   அடுத்த ஆண்டுக்கான இதழ்   தொடங்குவதற்கு முன்…. முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக்கிறார்.   நேற