இடுகைகள்

நூல் விமர்சனம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யசவந்தன் என்ற மனிதரைப் பற்றிய எழுத்தாளர் அறியும் பிம்பங்கள்! - அழிந்தபிறகு - சிவராம காரந்த், கன்னட நாவல்

படம்
        சிவராம காரந்த் அழிந்த பிறகு சிவராம காரந்த் சாகித்ய அகாதெமி பம்பாயில் வாழும் யசவந்தர் என்பவரின் தந்தி எழுத்தாளரின் வீட்டுக்கு வருகிறது. அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவரை  வந்து பார்க்கும்படியும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் எழுத்தாளரால் சரியான நேரத்திற்கு யசவந்தரை சென்று பார்க்கமுடியவில்லை. இதன் காரணமாக தாமதமாக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அவர் மருத்துவமனையில் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவருக்கு இறுதிச்சடங்குசெய்து முடித்தபிறகு பார்த்தால், அவரது அறையில் உள்ள கடிதங்கள், வீட்டுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றை படிக்கிறார். அதன் வழியே யசவந்தர் யார் என்பதை எழுத்தாளர் அறிந்துகொள்வதுதான் கதை. நாவல் முழுவதும் யசவந்தர் என்ற மனிதர் யார் எப்படிப்பட்டவர் என்பதை பல்வேறு மனிதர்களின் கருத்துகள், விவரிப்பு மூலமே சொல்லியிருக்கிறார். ஆசிரியர். யாருக்கேனும் துயரம் என்றால் தன்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும் மனிதர்தான் யசவந்தர். அவர் ஒருகாலத்தில் தனது தந்தை, தாத்தா வழி சொத்துக்களை பிறருக்கு கொடுத்தே அழிக்கிறார். பின்னாளில் திருமணமாகும்போது சொ...

காலத்தின் புழுதி படியாத லட்சியவாத நாவல்! - உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்

படம்
      தி.ஜானகிராமன்   உயிர்த்தேன்  தி.ஜானகிராமன்  பொதுமுடக்க காலத்தில் இந்த நூலை படிப்பவர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்படும். காரணம், இந்த நாவலில் கூட நாயகன் சென்னையிலிருந்து போதுண்டா பாண்டுரங்கா என்று தந்தை வாழ்ந்த சொந்த ஊரான ஆறுகட்டிக்கு வந்து வாழ்கிறார். அங்கு வரும் பிரச்னைகளை சமாளிக்கிறார். பூவராகவன் காகிதங்களை விற்கும் தொழில் செய்து அவரது அப்பா சம்பாதிக்காத அளவு, ஏன், பூவராகவனே நினைத்துப்பார்க்கமுடியாத காசு கொட்டுகிறது. சரியான முதலீடு செய்தால் உழைக்காமல் பணம் கிடைக்கும் அல்லவா? அதேதான். பணம் கிடைத்தாலும் மனத்தில் நிம்மதி இல்லை. ஊரில் உள்ள பெருமாள் கோவிலை புனருத்தானம் செய்ய அவரது அப்பா முயல்கிறார். ஆனால் பிராப்தமின்றி சில நாட்களிலேயே உயிர் துறக்கிறார். அந்த ஆசையை மகன் பூவராகவன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் மையக்கதை. ஜானகிராமனின் மற்ற கதைகளை விட இந்தக் கதை தீவிரமான லட்சியவாத தன்மை கொண்டது. சமூகத்திற்கு உழைக்கும் ஆன்மாகவாக பூவராகவன் உருவாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் அப்பா காரணமாக இருக்கலாம். அவரது சூழல் அப்படித்தான். அவரது வருகையால் உயிர்ப்பு பெ...

வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

படம்
      பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்           யாத்ரீகனின் பாதை வினோத் பாலுச்சாமி ப. 150 விலை ரூ. 500 மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை. அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம்.  தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்) ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது. சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக...

பல்லவ நந்தியின் கழுத்து அறுக்கப்பட்டது - அத்திமலைத்தேவனின் திருவிளையாடல் - அத்திமலைத்தேவன் 4

படம்
அத்திமலைத்தேவன் 4 - உடுமலை அத்திமலைத்தேவன் 4 காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம் ப.460 இந்த பாகத்தில் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு மன்னர் தேடி அலைந்து நந்திவர்மன் என்பவனை காம்போஜ நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இவனை வேட்டையாட சாளுக்கியர்கள், பாண்டியர்கள் என அனைவரும் ஆட்களுடன் காத்திருக்க இவர்களை பல்லவ நாட்டு விசுவாசிகள் காப்பாற்றுகின்றனர். அரச பரம்பரை என்றாலும் யோசிப்பது, செயலாற்றுவது ஆகியவற்றில் நந்திவர்மன் சாமர்த்தியசாலி அல்ல. இதனை உணர்ந்த குந்தள நாட்டு அரசன் வயிரமேகன் மகன் உதயச்சந்திரன், பல்லவ அரசனுக்கு அரியணை கிடைக்க உதவுகிறான். ஒரு கட்டத்தில் பல்லவ நாட்டு தளபதி உதயச்சந்திரன் மக்களிடம் பெரும் புகழ் பெற, நந்திவர்மனுக்கு பொறாமைத்தீ வயிற்றில் மூள்கிறது. ஏறத்தாழ பல்வாளத் தேவனுக்கும் பாகுபலிக்குமான போர் போலவேதான். பல்லவ மன்னனைச் சுற்றியுள்ள காம்போஜ நாட்டுக்குழு அவனை உதயச்சந்திரனை விலக்கி வைத்து அல்லது கொன்றுவிட யோசனை கூறுகிறது. ஆனால் பல்லவ மன்னர் அப்படி செய்தால் மக்கள் புரட்சி செய்து அரசை கலைத்துவிடுவார்கள் என்பதால் சாதுரியமாக தளபதி பதவியிலிருந்து இறக்கி நாடு கடத்துகிறார்கள். ...

அறிவியல் அமைப்புகளில் உள்ள பிராமணர்களுக்கிடையே ஏற்படும் போட்டி! - பொறுப்புமிக்க மனிதர்கள்

படம்
மெரினா புக்ஸ் பொறுப்புமிக்க மனிதர்கள் மனு ஜோசப் தமிழில்: க.பூரணச்சந்திரன் எதிர்வெளியீடு இந்த நாவல் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல். விருது என்ற விஷயம் இல்லாமலே நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. முழுக்க அவல நகைச்சுவை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அறிவியல் மையம் ஒன்றில் பிராமண ஆராய்ச்சியாளர்களுக்குள் நடக்கும் நீயா? நானா போட்டிதான் கதை. அரவிந்த் ஆச்சார்யா இயற்பியல் ஆய்வு மையத் தலைவர். அவர் பெருவெடிப்பு என்ற கொள்கையை மறுப்பவர். இவரது தலைமையின் கீழ் மேம்பட்ட பிற நாடுகள் செய்யும் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. அத்தனையையும் ஆச்சார்யா தேவையற்ற செலவு, வீண் ஆராய்ச்சி என்று தடுக்கிறார். அவரது கீழுள்ள நம்பூதிரி அவர் சார்ந்த ஆதரவாளர்கள் அனைவரும் அரவிந்த் ஆச்சார்யாவை எதிர்க்கின்றனர். ஆனால் மத்திய அமைச்சர் அரவிந்த் ஆச்சார்யாவை நம்புகிறார். ஆனாலும் ஆச்சார்யாவுக்கு சரிவு பெண்ணின் மூலம் தொடங்குகிறது. மனைவி ஊருக்கும் சென்றிருக்கும் போது, ஆய்வு மையத்தில் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சி செய்யும் இளம்பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார். பின்னாளில் குற்றவுணர்ச்ச கொண்டு மனைவியிடம் அந்த விவரங்களை சொல்லிவி...

பல்லவ வம்சத்தினரை வேரறுக்கத் துடிக்கும் மல்ல எதியின் கொலைவெறித்தாண்டவம்! - அத்திமலைத்தேவன் 3

படம்
அத்திமலைத்தேவன் 3 காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம் ப. 745 இந்த நாவலில் பல்லவர்கள் வம்சம் முடிவை நெருங்குவதற்கான அனைத்து விஷயங்களும் நடைபெறுகிறது. அவனிசிம்மன் வித்யுகா என்ற நடனபெண்மணியுடன் உறவு கொண்டு மகனை பெறுகிறான். ஆனால் அரியணை என்று வரும்போது பிரிய நாயகியின் மகன், மகேந்திர பல்லவனுக்கு வாய்ப்பு என்று நினைத்து வித்யுகாவை கொல்ல ஏற்பாடு செய்கிறான். இதனால் கோபம் கொல்லும் அவன் மகன் குணபரன், பல்லவ வம்சத்தை பழிவாங்க சபதம் செய்கிறான். இதைத் தாண்டி அவனை ஆதரிக்கும் குடும்பத்திற்கும், அவன் தங்கையாக நினைத்த பெண்ணுக்கும் அரச குடும்பம் இழைக்கும் அநீதி அவன் ரத்தத்தை கொந்தளிக்க வைக்கிறது. இதனாலும் பிரக்ஞதாரா செய்த சில நுட்பமான தந்திரங்களாலும் பல்லவ வம்சத்தில் ஏராளமான மரணங்கள் நடக்கின்றன. இந்த நூலில் சிங்க மல்லன் எப்படி தேவ உடும்பரத்தை பெறுகிறான் என்பதை காலச்சக்கரம் நரசிம்மா அழகாக விவரித்துள்ளார். அத்திமலையான் கோவிலில் நவரத்ன பல்லவி தற்கொலை செய்துகொண்டுள்ள இடத்திலிருந்து, புதிர்கள் விடுபடத் தொடங்குகின்றன. ஜெயவர்மன் ஒலைச்சுவடியை கொடுத்துச் சென்ற அஞ்சில் அணங்கு குடும்பத்திலிருந்து வந்த ப...

மன்னருக்காக உயிர் துறப்பது மக்களின் கடமையா? - நந்தாவிளக்கு - பாலகுமாரன்

படம்
நந்தா விளக்கு பாலகுமாரன் சோழர்காலத்தில் வேளாளர் குடும்பம் நரிப்பள்ளம் எனுமிடத்தில் வசித்து வருகிறது. இவர்களின் வாழ்க்கை, சுக, துக்க வேதனைகளை சோழ அரசின் போர்ப்பின்னணியில் பாலகுமாரான் விவரித்துள்ளார்.  முக்கியமான கதாபாத்திரம் உமையாள். இவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசன் வெற்றி பெற்று வந்தால், தங்களது தலையை வெட்டி இறப்பதாக சபதம் செய்கின்றனர். இப்படி அரசனுக்காக தன்னைத்தானே இழந்து குடும்பத்திற்கான நலன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிறரது நிலத்தில் விளையும் பொருட்களுக்கு வரி உண்டு. ஆனால் உமையாள் குடும்பத்திற்கு வரி கிடையாது. நாட்டுக்காக தன் உயிரை இழந்த குடும்பம் என்ற கனிவு அரசருக்கு இருக்கிறது.  ஆனால் ஊரில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. நமக்கு இப்படி நலன்களைப் பெறத் தெரியவில்லையே என்று. ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண் இறந்துபோனதை அவர்கள் கருத்திலேயே கொள்ளவில்லை. அந்த ஊர்க்கார ர்களே உமையாளுக்கு பொன் தர்மன் என்ற வீரனை கல்யாணம் செய்து வைக்கின்றனர். அவன் குழந்தை பிறக்கும் நேரம், நான் அரசர் உயிரோடு வந்தால் எனது உயிரை அவருக்கு காணிக்கை ஆக்குவேன் என்று பிரதிக்ஞை செய்கிறான்....

மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி முக்கிய நூல்கள் அறிமுகம்!

படம்
நூல் அறிமுகம் காரி 2008 அம்ருதா பாட்டில் ஹார்பர் கோலின்ஸ் இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர் பற்றி முதல் கிராபிக் நாவல். மும்பையில் வாழும் இருவர் பற்றிய கதை. மாற்றுப்பாலினத்தவர் பற்றிய வாழ்க்கை, அவல நகைச்சுவை, ஜீரணிக்க கடினமான உண்மைகள் என கிராபிக் நாவல் நாம் பார்க்க உலகை அறிமுகப்படுத்துகிறது. சாக்லெட் அண்ட் அதர் ரைட்டிங்க்ஸ் ஆஃப் மேல் – மேல் டிசையர் 2006 உக்ரா ஆக்ஸ்போர்டு பிரஸ் 1927ஆம் ஆண்டு இந்தியாவில் தேசியவாதம் வேகம்பிடித்த காலத்தில் இலக்கிய உலகில் எழுத தொடங்கியவர் உக்ரா. இவர் எழுதிய ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய கதைகளின் தொகுப்பு, சாக்லெட். ரூத் வனிதா இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி அனைவருக்கும் வாசிக்கும் படி செய்திருக்கிறார். டின்மேன் 2017 சாரா வின்மேன் எல்லிஸ், மைக்கேல் ஆகியோரின் உறவு எப்படி நட்பாக தொடங்கி காதலில் முடிகிறது என்பதை விவரிக்கிறது நாவல். குழப்பான உறவு சூழல் இந்த உறவில் குறுக்கிடும் அன்னாவால் மேலும் சிக்கலாகிறது. எழுத்தாளரின் மூன்றாவது நாவல் இது. ஹார்ட்ஸ்டாப்பர் 2019-20 அலைஸ் ஓஸ்மன் நிக், சார்லி ஆகிய இருவரின் பல்வேறு சமூக தடைகளை தாண்...

சீனத்துக்கு கடத்தப்படும் அத்திமலைத்தேவன்! - பல்லவர்களின் வீழ்ச்சி

படம்
அமேஸான் அத்திமலைத்தேவன் -2 காலச்சக்கரம் நரசிம்மா வானதி ப.496 இந்த பாகத்தில் முழுக்க சமுத்திர குப்தனின் எழுச்சி, பல்லவர்களின் படிப்படியான வீழ்ச்சி பௌத்த துறவிகள் மூலமாக எப்படி நடைபெறுகிறது என காட்டியுள்ளார்.  நாவலில் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் நடக்குமோ என நினைக்கும் இடத்தில் எல்லாம் நோக்குவர்மம், வர்மக்கலை ஆகியவைதான் இடம்பெறுவதால்,சற்று விரக்தி தோன்றுகிறது.  இந்த நாவலும் முழுக்க அரசு குடும்பம், அங்கு நடைபெறும் சூழ்ச்சி, அதை எப்படி முறியடிக்கின்றனர் என்பதை மட்டுமே பேசுகிறது. வேறு விஷயங்கள் இதில் பேசப்படவில்லை.  பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும் அருள் பாலித்த காஞ்சி வரதர் இம்முறை பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு சீனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதுதான் கதை  குப்த வம்சத்தில் பிறக்கும் ஆர்யன், விவேகன், சுவேதன் ஆகியோரில் யார் சமுத்திர குப்தன் என்பதை அறியும் சோதனை, அறிந்தபிறகு அவனுக்கு மகுடம் சூட்டும் விழா, சமுத்திர குப்தனை கொல்ல  நினைக்கும் சகோதரர்கள், அவர்களுக்கு உதவம் துரோகிகள் என வாசிக்க நிறைய திருப்பங்கள் உள்ளன. பரபரப்பான பல்வேறு...

ஆபூர்வ கரணி மந்திரத்தை திருடும் சித்தவைத்தியரை விரட்டிப்பிடிக்கும் பார்வையற்றவளின் கதை! - கர்ண பரம்பரை

படம்
மெரினா புக்ஸ் கர்ண பரம்பரை 2016 நரசிம்மா வானதி பதிப்பகம் ரூ.225   சப்தாமலை மூலிகைகளின் சொர்க்கபுரி. இங்கு வாழ்ந்து வருகிறார் துளசி ஐயா என்ற துறவி. இவருக்கு சேவைகள் செய்து அவர் மனதில் இடம்பிடிக்கிறார் நல்லம்மர் என்ற செல்வந்தர். பணக்காரராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவருக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து துளசி ஐயாவின் அருளாசியினால் நம்பிராஜன் என்ற மகன் பிறக்கிறார்.     நல்லம்மருக்கு கர்ண மந்திரம் என்ற புகழ்பெற்ற அபூர்வ மந்திர உபதேசம் நடைபெறவிருக்கிறது. சத்யம் தியேட்டரில் ரஜினி படம் போடுகிறார்கள் என்பது போல நல்லம்மர், சென்னையில் உள்ள தன் மகன் குடும்பத்திற்கு கடிதம் போட பிரச்னை உருவாகிறது. அவரை வாழ்த்துவதற்கு சென்னையிலிருந்து வரும் வைத்தியர்களில் ஒருவர் நல்லம்மரை வாழ்த்தி ருத்ராட்ச மாலை ஒன்றை கழுத்தில் போடுகிறார். அது டேப் ரிக்கார்டர் என்று தெரியாமல் துளசி ஐயாவிடம் உபதேசம் பெறுகிறார் நல்லம்மர். இதன் காரணமாக, இருவரும் தொன்னைக்காது சித்தரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகிறார்கள். நல்லம்மர் எதிரிகளால் வேட்டையாடப்பட்டு இறக்கிறார். நல்...

அரசக் குடும்பத்தை பழிவாங்கும் விதவையின் ஆக்ரோஷ பயணம்! - காலச்சக்கரம்

படம்
குட்ரீட்ஸ் காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம்   நாவலில் வரலாறு, பண்பாடு, தாந்த்ரீகம், குற்றம் என பல்வேறு துறைகள் சார்ந்த விவரங்கள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.   1947 ஆண்டு தொடங்கி 2007 ஆம் ஆண்டு வரை கதை நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை புரிந்துகொண்டாலே கதை எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது என புரிந்துகொள்ளலாம்.   காஷ்மீரைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற திருமணமான பெண்ணை அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜெயன் சக்ரவர்த்தி என்பவர் பலவந்தமாக தனது காதலியாக்கி சிதைக்கிறார். அப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பிறகு கைவிடுகிறார். இதனால் ஷ்ரத்தா என்ற பெண் எடுக்கும் பழிவாங்கும் படலமே காலச்சக்கரம்.   நாவல் முழுக்க இந்தியக் கலாச்சாரம் சார்ந்த அக்கறையுடன் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசுகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் அடித்து விரட்டப்படுவதை வரலாறு சம்பவமாகவும், கதையில் முக்கியச் சம்பவமாகவும் சேர்ந்த ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னணியில்தான் கதை வேகம் பிடிக்கிறது. முதல் அத்தியாயம், அனந்தம்பூர் அரண்மனையைச் சேர்ந்த வசுந்திரா தேவி கனவு கண்டு அலறுவதும், அவளைப் பார்க்க திவான் காரில...

வாழ்க்கையில் நளபாகத்தை சமைத்து பரிமாறியவனின் கதை - நளபாகம் - தி.ஜானகிராமன்

படம்
பனுவல் கணையாழியில் தொடர்கதையாக வந்து இப்போது நாவலாகி உள்ளது. அடிப்படையாக ஜானகிராமனின் கதைகள் அனைத்தும் மனம், உடல் விதித்துள்ள விதிகளை மீறுவதுதான். இதிலும் அதே விஷயங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை நேரடியாக நடைபெறுவதில்லை. நம்பிக்கை. வீண்பழி, வதந்தி, கிசுகிசு ஆகியவை இந்த நாவலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.  நாயுடு என்ற சுற்றுலா அழைத்துச் செல்பவரிடம் தலைமை சமையல்காரராக காமேஷ்ச்வரன் இருக்கிறார். அங்கு சுற்றுலா வரும் ரங்கமணிக்கு அவரது வம்சம் தழைக்காத சோகம் உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறது. அவருக்கு, சமையக்காரரைப் பார்த்ததும் அவர் மூலமாக தன் வம்சத்தை மீள கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போடுகிறார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட அழைக்கிறார். இவரின் மனக்கணக்கை புரிந்துகொள்ளாத காமேஷ், இப்படி பாசமாக அழைக்கிறாரே என்று கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூரிலுள்ள நல்லூருக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை. தி.ஜாவுக்கு பழமையான விஷயங்கள், காவிரி ஆறு, கொல்லைப்புறம், மரங்கள், உணவு என என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் வாசகர்களுக்காக பரிமாறியிருக்கிறார். நூலை வா...

போதைப்பொருள் கூட்டத்தை பிடிக்க காவல்துறை ஆடும் ஆட்டம்! - தேடினால் கிடைக்காது - ராஜேஷ்குமார்

படம்
  பிக்ஸாபே அது இது எது? சென்னையில் காட் மைன் என்ற போதைப்பொருள் மறைமுகமாக விற்கப்படுகிறது. இதனை யார் விற்கிறார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் கைது செய்ய ஆதாரம் வேண்டுமே? அதற்கு அவர்கள் ஏராளமான திருப்பங்கள் நிறைந்த நாடகமே அது இது எது?   குமுதா நேர்காணலுக்கு செல்கிறாள். அவள் துப்பாக்கியை பூக்காரியிடம் வாங்கும்போதிலிருந்து கடைசி வரை நமக்கு பதற்றம் குறையவே மாட்டேன்கிறது. இதற்கு இடையில் சூடாமணி என்ற இளம்பெண்ணை அவளது பெற்றோர் அட்மிட் செய்துவிட்டு தடாலெட காணாமல் போகிறார்கள். குமுதா நூறு பேர் கலந்துகொள்ளும் நேர்காணலில் சிம்பிளாக ஒரே ஒரு மிரட்டல் வீடியோவைக் காட்டி வேலையை வாங்குகிறார். அந்த வீடியோவைப் பார்த்து கம்பெனி உரிமையாளர் சங்கர் பிரபு ஏன் வியர்த்து வழிகிறார், அதன் பின்னணி என்ன என்பதை நாவலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். விறுவிறு வென்ற வேகமும், கச்சிதமான உரையாடல்களும் நாவலுக்கு பலம் சேர்க்கின்றன. இறுதிப்பகுதியில் ஐயையோ ஹேமா கைமாவா என நினைக்கும்போதே வரும் அதிரடி திருப்பம் ஆசம் சொல்ல வைக்கிறது.   2 விடாதே விவேக் விடாதே சென்னையிலிருந்து தலை...

காமதேனுவின் சக்தியை சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் சுயநல குடும்பம்! - காமதேனுவின் முத்தம்

காமதேனுவின் முத்தம்  காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம்.  ப. 579 ரூ. 300 தெய்வீகத்தன்மை கொண்ட சாகச நாவல்.  கோவூர் என்ற ஊரிலுள்ள கோவிலில் பெரிய வீட்டுக்காரர்கள் ஊர் நன்மைக்காக யாகம் ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இதில் பெரியவீட்டுக்கார  பெண்கள் யாரேனும் கர்ப்பிணியாக கலந்துகொண்டால்  அந்த ஊருக்கு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்புகிறார்கள். காமதேனுவை கர்ப்பணிப் பெண் தன் கண்ணார பார்த்துவிட்டால் அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு தெய்வீகத்தன்மை கிடைக்கிறது. அவள் சொல்வதெல்லாம் பலிக்கிறது. அவள் தொட்ட இடமெல்லாம் சந்தனம், பன்னீரின் மணம் வீசுகிறது. இப்படி தமயந்தி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு தேனுகா என்ற பெண்குழந்தை பிறக்கிறது. அவள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாஞ்சாலியம்மா என்ற தமயந்தியின் மாமியார், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என கூறப்படுகிறாள். உண்மையில் அவளுடைய மகளுக்கு நேர்ந்த கொடூரமான முடிவால் அவள் புத்தி பிறழ்ந்து போனதுபோல ஆகிவிடுகிறாள்.  தமயந்தி கர்ப்பிணியாக இருக்கும்போது காமதேனுவைப் பார்க்கிறாள். அதை சொல்லவேண்டாமென அவள் வீட்டு வேலைக்காரி அங்காயி சொல்கி...

ஐஏஎஸ் பதவியில் சாதித்த சாதனைகளும், சிக்கல்களும் - ப.ஸ்ரீ. இராகவன்

படம்
நேரு முதல் நேற்று வரை  ராகவன்  கிழக்கு பதிப்பகம் சுதந்திரமடைந்த இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகவன், தனது பணி அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார். வெறும் விருப்பு வெறுப்பு மட்டுமன்றி, எதிர்கால குடிமைப்பணித் தேர்வு எழுதும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இறுதிப்பகுதியிலும் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தலைநகரான டில்லியில் பணியாற்றுவதற்காக ஆங்கிலத்தோடு இந்தியும் கற்றது தனக்கு எப்படி பயன்பட்டது என்பதை லால் பகதூர் சாஸ்திரியோடு பணியாற்றிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். இதை சொல்லும்போதும், பல்வேறு நிகழ்வுகளின்போதும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமின்றி அரசியலுக்காக இடம் மாற்றுதல் செய்யப்படுவதை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார்.  இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள அரசு தலையீடூ  என புரிந்துகொண்டு நாம் வாசித்து கடந்துவிடலாம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஜோதிபாசு என பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழகிய அனுபவங்களை நேர்த்தியாக தொகுத்து எழுதியுள்ளார். கொல்கத்தாவில் செய்த வளர...

நவீன இந்தியாவின் சிற்பிகள்! - ராமச்சந்திர குஹா

படம்
நவீன இந்தியாவின் சிற்பிகள் தொகுப்பு: ராமச்சந்திர குஹா தமிழில்: கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பதிப்பகம் நேரு,காந்தி, கோல்வால்கர், சுபாஷ் சந்திரபோஸ் , ஈ.வெ.ராமசாமி, உள்ளிட்ட அறிமுகமானவர்களோடு ராஜாஜி, சையது அகமது கான்,  கமலாதேவி சட்டோபாத்யாய, தாராபாய் ஷிண்டே, ஹமீத் தல்வாய்  உள்ளிட்ட பலரும் அறியாத நவீன இந்திய சிற்பிகள் பதினெட்டு பேர்களின் அறிமுகத்தை நூல்வழியாக செய்திருக்கிறார் ராமச்சந்திர குஹா.  சாதாரணமாக ஒருவரைப் பற்றிய அறிமுகம் என்றால் நாம் என்ன செய்வோம்? எங்கே படித்தார், என்ன செய்தார் என்பதோடு முடித்துக்கொள்ளும் வகையிலான நூல்களை அதிகம் படித்துள்ளோம். இதில் கூடுதலாக அவர்கள் எழுதிய கட்டுரை, பேசிய பேச்சுகள் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  நேருவைப்பற்றி பதிவுகள் நேர்த்தியானவையாக எனக்கு தோன்றின. காரணம் சுதந்திரத்திற்கு முன்பே அவர் எழுதிய மூன்று நூல்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக அவர் ஆற்றிய பணிகள், மாநில முதல்வர்களோடு தொடர்ச்சியாக உரையாடிய செயல்பாடு  இன்றைய வரையில் வேறு பிரதமர்கள் கடைபிடிக்காத ஜனநாயக முறை என்று தோன்றி...

முதுகுளத்தூரில் நடந்த உண்மை!

படம்
முதுகுளத்தூர் பயங்கரம் - கலவரம்! தொகுப்பு: மயிலை நாதன் எழுத்தாக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் - தினகரன் வெளியீடு: சிந்தனை ரூ.90 டி.எஸ்.சொக்கலிங்கம் -தினகரன் ஆகியோர் முதுகுளத்தூரில் களசாட்சியாக நின்று பதிவு செய்த தரவுகளை எழுதியுள்ளனர். மு.தே எப்படி அங்குள்ள படிப்பறிவற்ற தன் இன மக்களை அவர்களின் பிரச்னைகளுக்கு பிற இனத்தவர்கள் காரணம் என வன்முறையை தூண்டிய வரலாற்றை துல்லியமாக பதிவு செய்துள்ளனர்.  காங்கிரஸ் இக்காலகட்டங்களில் செய்த தவறு, ஜாதி ஆதிக்கத்தை கையிலெடுத்து தன்னுடைய கிராமங்களில் குறுமன்னர் போல ஆண்டு வந்த மு.தேவரை  தேர்தலில் தன் கட்சி வேட்பாளராக நிறுத்தியதுதான். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தவறை முதல்வர் காமராஜர் நேர் செய்தார்.  முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்களை மு.தே தமக்கு மட்டுமே வாக்களிக்க பிராமிசரி நோட்டில் கையெழுத்து வாங்குமளவு நிலைமை மாறியிருந்ததும், காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்களை தாக்கியதும், விளைச்சலை கொள்ளையிட்டதையும், பெண்களை வல்லுறவு செய்ததும், நிலவரி கேட்ட அரசு அதிகாரிகளை தாக்கி காலை வெட்டியதும் படிக்கும்போதே பீதி ஏற்படுத்தும் நிக...