இடுகைகள்

வால்ஸ்ட்ரீட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உதவாக்கரை பங்குகளை விற்று சாதனை படைத்த மனிதனின் எழுச்சியும், வீழ்ச்சியும் - தி வோல்ஃப் ஆப் வால்ஸ்ட்ரீட்

படம்
  வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் லியனார்டோ டிகாப்ரியோ, மார்க்கரேட் ராபி இயக்கம் மார்ட்டின் ஸ்கார்சி அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் எனும் பங்குச்சந்தை நிறுவனம் பற்றி அறிந்திருப்பீர்கள். அதுதான் உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இடம். அங்கு வேலைக்கு வரும் பெல்ஃபோர்ட் என்ற மனிதன், பங்குச்சந்தை உலகில் மிகப்பெரும் மனிதராக எப்படி உருவானார் என்பதே படத்தின் கதை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றாலும் சொல்வதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளன. டிகாப்ரியோ பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய முக்கியமான காட்சிகள் உள்ளன. அதில் அவர் முதன்முதலில் பங்குச்சந்தை பங்குகளை விற்க வாடிக்கையாளர்களுக்கு போன் செய்ய தன்னை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும் என கற்றுக்கொள்ளும் காட்சி. இங்குதான் போதைப்பொருட்களை பயன்படுத்த கற்கிறார். அவர் வாழ்வின் இறுதிவரையில் போதைப்பொருட்களை பயன்படுத்தி தனது வாழ்க்கையின் உயரம் தொட்டு கீழே விழவும் இதே பழக்கம்தான் வழித்தடமாக அமைகிறது. பங்குகளை விலைபேசி விற்கும் அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கு அவர் வேலை செய்து பெரிதாக சாதிக்க முடியாத சூழல்.