இடுகைகள்

ஏகாங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பக்கத்திலே நரவலே கிடந்தாலும், அங்கேயே எலையைப் போட்டு சோறு திம்பேன் - ஒரே உலகம் ஒரே பாரதீயன்

படம்
இக்னோர் தி ட்ரூத் ஃபார் செல்ஃப் பெனிஃபிட்ஸ் என்ற வாக்கியம் மனதிற்குள் ஆழமாக ஒலிக்கத் தொடங்கியது. எங்கிருந்து இந்த வாக்கியம் தோன்றியது என யோசித்தாலும் எதுவும் உடனே நினைவுக்கு வரவில்லை. ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து கிலோமீட்டர் சென்றே தீர வேண்டும் என்ற லட்சியத்தை பேருந்து ஓட்டுநர் மனதில் கொண்டிருந்தார். எனவே, பேருந்தை ஏராளமான டிவிஎஸ் 50, ஸ்கூட்டிகள கூட முந்திக்கொண்டு சென்றன. பழனிக்கு கூட நாம் முன்னே நகருகிறோமா இல்லை நிற்கிறோமா என்று சந்தேகமாக இருந்தது. நல்லவேளை ஜன்னலில் காட்சிகள் மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருந்தன. பேருந்தில் மெல்ல மக்கள் கூட்டம் நிரம்பத் தொடங்கியது. பெண்களுக்கு இலவசம் என்பதால் நிறைய பெண்கள் ஏறுகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் கண்டக்டரின் முகம் ஏறும் பெண்களைப் பார்த்து நல்லவிதமாக யோசிக்கவில்லை. ‘’பொம்பளைங்களுக்கு இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க. முதல்ல மாதிரி யாரும் கரெக்ட்டா கையைக்காட்டி ஏறது இல்ல. அவிங்க பாட்டுக்கு சிரிச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க. பஸ்சு பக்கத்துல வந்ததும் ஏதோ எஸ்கேஎம் முட்டக்கம்பெனி வண்டி மாதிரி நிற்கும் கையைக்கூட பெருசா காட்டறதில்ல. ஏறுனாலும் சீட்

ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1

படம்
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். எப்பட்ரா கல்யாணமெல்லாம்? அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ எதுவும் பண்ணுலியா? நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா? பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா? நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம். சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும்