இடுகைகள்

சமூகப்பணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருநிறுவன சமூகப் பொறுப்பு!

படம்
optimy wiki அத்தியாயம் 1 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! தற்போது உலகம் முழுக்க இயங்கி வரும் பெருநிறுவனங்கள், அங்கு பல்வேறு சமூகத்திட்டங்களைச் செய்து வருகின்றன. இதற்கென தங்களது நிகர லாபத்தில் குறிப்பிட்ட அளவை ஒதுக்கி வருகின்றன. இந்தியாவில் சமூகப் பொறுப்புத் திட்டங்களுக்கான நிதியை வரையறை செய்து, அதனைச் செலவழிக்க அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. சமூகப்பொறுப்பு பற்றிய சிந்தனை 1930 ஆண்டு முதலாக தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் செஸ்டர் பர்னார்டு எழுதிய, தி பங்க்ஷன் ஆஃப் தி எக்சிகியூட்டிவ் (1938), தியோடர் கிரெப் எழுதிய மெசர்மென்ட் ஆஃப் தி சோசியல் பர்ஃபாமன்ஸ் ஆஃப் பிசினஸ் (1940) ஆகிய நூல்கள் இந்த சிந்தனையை மக்களுக்குத் தூண்டின. பின்னர் 1950 இல், சமூக பொறுப்புணர்வு என்று இந்த நோக்கம் சுருக்கமாக குறிப்பிடப்பட்டது.  1953 ஆம்ஆண்டு ஹோவர்ட் போவன்  என்ற எழுத்தாளர் ஒரு நூலைப் பிரசுரித்தார். சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் ஆஃப் தி பிசினஸ்மேன்  எனும் அந்த நூல்தான், பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்ற வார்த்தையை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இதனால்  ஹோவர்ட் போவன் சமூக பொறுப்புணர்வின் தந்த