இடுகைகள்

கண்டுபிடிப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்

படம்
              விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள் எட்வின் ஹப்பிள் இவர் 1927ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் தொலைதூரத்தில் உள்ள விண்மீன்களை கண்டுபிடித்து அதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரால்ப் ஆல்பர், ராபர்ட் ஹெர்மன் ஆகிய இருவரும் 1948ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் வெளியாகும் கதிர்வீச்சு, அதன் வெப்பநிலை பற்றி கண்டுபிடித்தனர். -268 டிகிரி செல்சியஸ் என உறுதி செய்தனர். 1964 ஆம் ஆண்டு அர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் ஆகியோர் பலவீனமான ரேடியோ ஒலி ஒன்றை பதிவு செய்தனர். பின்னர் அது பெருவெடிப்பில் உருவான கதிர்வீச்சில் உருவானது என விளக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு கோப் காஸ்மிக் பேக்கிரவுண்ட் எக்ஸ்ப்ளோரர் சாட்டிலைட் , பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சை கண்டுபிடித்தது. பெருவெடிப்பு சார்ந்த கதிர்வீச்சு இதற்கு காரணம் எனவும், அதன் துல்லியத்தன்மையும் பின்னர் கண்டறியப்பட்டது. 2001ஆம் ஆண்டு வில்கின்சன் மைக்ரோவேவ் புரோப் விண்வெளியில் ஏவப்பட்டது. இதன்மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என கணிக்கப்பட்டது. பிபிசி  

காமெடி அறிவியல் விருதுகள் - எல்ஜி நோபல் பரிசு!

படம்
எல்ஜி நோபல் பரிசு! விநோதமான வித்தியாசமான யோசனைகள் சிந்தனைகள் அறிவியலுக்கு அவசியம். முன்பு என்ன இது, கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்த விஷயங்கள்பின்னாளில்  மகத்தான கண்டுபிடிப்புகளாக நிறைவேறியுள்ளன. அவற்றைக் கவனப்படுத்தி பரிசுகளை வழங்குகிறது எல்ஜி நோபல் கமிட்டி. அனாட்டமி விருது! ஆண்களின் விதைப்பையின் இடதுபுறம் ஏன் வலதுபுறத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சி. ஏண்டா இப்படி என்று கேட்டீர்கள் என்றால் உடனே கட்டுரையைவிட்டு வெளிநடப்பு செய்துவிடுங்கள். இதற்காக ஆய்வாளர் ரோஜர், போரஸ் எத்தனை பேரை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? தபால்காரர்களை 20-52 வயது வரை தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். சங்கோஜமாக இருக்காதா என்று கேட்காதீர்கள். நமக்கு ஆராய்ச்சிதான் முக்கியம். வேதியியல் விருது ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை ஜொள் விட்டு உலகமே பார்த்தது. அப்போது அனைவரின் வாயில் வடித்த தோராய ஜொள்ளின் அளவு என்ன? ஆம். இதைதான் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். ஐந்து வயது சிறுவனின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு சதவீதத்தை இதன்மூலம் கணித்துள்ளனர்.