இடுகைகள்

டிஜிட்டல் இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

தேசிய நெடுஞ்சாலையில் வரி வசூல்!

படம்
giphy.com இந்தியாவில் உள்ள சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய டேட்டா இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 525 மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 500 தினசரி ஃபாஸ்டேக் முறையில் நடக்கும் வரி வசூல் - 1.1 மில்லியன் தினசரி இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் - 25- 30 கோடி ஃபாஸ்டேக் முறையை ஏற்ற வாகனங்களின் எண்ணிக்கை 6.2 மில்லியன். வாகனங்களின் கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் பொருளான ஃபாஸ்டேக்கை வங்கியில் ரூ.25 கொடுத்து பெறலாம். இதனுடன் உங்கள் வங்கி கணக்கை இணைத்து சுங்கச்சாவடிகளில் பணத்தை டிஜிட்டல் முறையில் கட்டலாம். எனவே இனி சில்லறைக்கு அல்லாட வேண்டியதில்லை. மேலும் இதனுடன் வாகன எண்களும் இணைக்கப்படுவதால் உங்கள் வாகனம் காணாமல் போனால், சட்டவிரோத விவகாரங்களில் மாட்டிக்கொண்டால் காவல்துறை அதை எளிதாக அறிய முடியும். இதே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி 2020 ஆம்ஆண்டு ஏப்ரல் மாத த்தில் எரிபொருட்களை வாங்கவும், வாகன நிறுத்தங்களுக்கு கட்டணங்களை செலுத்தவும் விரிவாக்கம் செய்யவிருக்கிறார்கள். நன...