இடுகைகள்

புனைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப