இடுகைகள்

பக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட பெண் துறவிகளுக்கான சேவைதான்!

படம்
         ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட சேவைதான்! இந்தியத் தலைநகரில் நடந்த சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அத்ஹியாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இந்த ஆசிரமங்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் கோவையில் இருந்து கூட பதினாறு வயது சிறுமி, ஒருவர் ஏவிவி எனும் இந்த ஆசிரம கிளைக்கு ஓடிப்போனார். ஆம். நகைகளுடன் சென்று துறவியானார். இப்போது அந்த இளம்பெண்ணின் அம்மா, மகளை மீட்க சட்ட உதவியை நாடியிருக்கிறார். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆசிரமத்தை நடத்தும் வழக்குரைஞர் அமோல் கோகனேவை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, துறவியான மகளை தினசரி நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சந்தித்துக்கொள்ளலாம் என கருணை காட்டியது. நீதிமன்றத்தில் கூட மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ஆட்கள்தானே நியமிக்கப்படுகிறார்கள். பெரிதாக பயன் ஒன்றும் இருக்காது. மக்களே ஒன்று திரண்டு ஏதாவது செய்தால்தான் பயனுண்டு. ஏவிவி என்ற ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். நான்கு மாடி கட்டிடங்களைக் கட்டி அதில் கன்னி கழியாத பெண்களை நேர்காணல் வைத்து குரு தீக்சித் தேர...

தெரிஞ்சுக்கோ - காளி!

படம்
giphy காளி இந்துக்கடவுள். இந்த வரையறையைத் தாண்டி காளி என்றால் அழிவு சக்தி. இன்றும் இதற்காக பல்வேறு மனிதர்களை கொன்று நரபலி செய்பவர்கள் உண்டு. பெண் தெய்வ வழிபாட்டை சாக்தம் எனும் மதமாகவே இந்தியாவில் வளர்த்தெடுத்தார்கள். இன்று இந்த பாரம்பரியம் கேரளத்திலும், கோல்கட்டாவிலும் உள்ளது. இதைப்பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். கடவுள் என்பது தோன்றியபோது, மகாவித்யா எனும் பத்து பெண்கள் உருவாகின்றனர். இதில் காளிதான் முதல் இடத்தைப் பிடிக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கும் காளி நான்கு முதல் பத்து கரங்களைக் கொண்டிருப்பார். இந்தியாவில் 3 கோடிகளுக்கும் அதிகமான பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இதில் பொங்கல் தின்கிற கடவுள் முதல் கள்ளு குடித்து கருவாடு தின்னுகின்ற கருப்பண்ணசாமி வரை அடக்கம். மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை விழாவன்று அரசு விடுமுறையே உண்டு. காளியின் கழுத்தில் கிடக்கிற மண்டையோட்டை பார்த்திருப்பீர்கள். அதனை வர்ணமாலா என குறிப்பிடுகிறார்கள். இந்தியில் உள்ள எழுத்துக்களை குறிப்பது என்பது சிலரின் கருத்து. கடவுள்களை துதித்து அருள்பெற அவர்க...