இடுகைகள்

உடன்கட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

படம்
  சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன்ராய் இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா.  கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார்.  வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங்கிலம், அரபி,